ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      அரசியல்
25uma01

 

மதுரை,பிப்.26 - ஜெயலலிதா பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தங்க மோதிரங்களை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.பி.உதயகுமார் அணிவித்தார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 63-வது பிறந்த நாள் விழா மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செல்லூர் கே.ராஜூ ஏற்பாட்டின் பேரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னதானம், ரத்ததானம், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை அ.தி.மு.க. வினர் பல்வேறு இடங்களில் வழங்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஜெயலலிதா பிறந்த நாளில் பிப்ரவரி 24-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் நேற்றுக்காலை வரை பிறந்த 15 ஆண் குழந்தைகள் மற்றும் 6 பெண் குழந்தைகள் என 21 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடந்த இந்த விழாவில் மாவட்ட பொறுப்பாளரும் மாநில மாணவரணி செயலாளருமான வழக்கறிஞர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு 21 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை பரிசாக அணிவித்தார். 

இந்த விழாவில் மாவட்ட அவைத்தலைவர் புதூர் கே.துரைப்பாண்டியன், எம்.ஜி.ஆர்.மன்ற மாநில துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து, பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மாவட்ட இணைச்செயலாளர் குமுதா, துணைச்செயலாளர் சி.தங்கம், பகுதிகழக செயலாளர்கள் வி.கே. எஸ். மாரிசாமி, தளபதி ஆர்.மாரியப்பன், கே.ஜெயவேல், அண்ணாநகர் முருகன், பூமிபாலகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.முத்துராமலிங்கம், அண்ணாநகர் முனியசாமி, எல்லீஸ்நகர் எ.இந்திரா, அணி செயலாளர்கள் எஸ்.டி.ஜெயபாலன், ஷ.ராஜலிங்கம், பெ.இந்திராணி, எ.ராஜீவ்காந்தி, வக்கீல் தமிழ்செல்வன், பாசறை செயலாளர் டி.வினோத்குமார், வடக்குத்தொகுதி இணைச்செயலாளர் வக்கீல் எ.பி.பாலசுப்பிரமணி,  மாவட்ட பேரவை துணைத்தலைவர் புதூர் அபுதாகீர், வடக்குப்பகுதி மன்ற செயலாளர் கே.கே.நகர் மணி, மன்ற மாவட்ட இணைச்செயலாளர் வி.கே.சாமி, துணைத்தலைவர் முத்துசாமி,  தெற்கு பகுதி இளைஞரணி செயலாளர் முத்திருளாண்டி, கவுன்சிலர் பார்த்தீபன், தொகுதி செயலாளர்கள் எஸ்.முருகேசன், ரவீந்திரன், எஸ்.குமார், வட்டச்செயலாளர்கள் எ.காஜா, எம்.தேவதாஸ், சக்தி விநாயகர் பாண்டியன், மூக்கூரான், கார்னர் பாஸ்கர் மற்றும் எம்.என்.கோவிந்தராஜன், விஸ்வலிங்கம், பரமேஸ்வரன், கோட்டைச்சாமி, யுகா ராஜா, பாஸ்கரன், செல்லூர் பாலமுருகன், மகளிரணி தேனம்மாள், செல்வி, தெய்வம் கணபதி, எல்டா பாஸ்டின், புதூர் பாப்பா, பி.புஷ்பா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: