முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைக்கேல் ஜாக்சனின் கோட் ஏலம்

புதன்கிழமை, 8 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

பெவர்லிஹில்ஸ், ஜூன்.- 8 - மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் கோட் ஏலம் விடப்படுகிறது. பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் தனது 50 வயதில் மரணமடைந்தார். அவர் பயன்படுத்திய ஆடைகள், கையுறைகள், தொப்பி போன்றவை ஏலத்துக்கு விடப்பட்டன. அதைத்தொடர்ந்து வரும் 25,26 தேதிகளில் பெவர்லிஹில்சில் உள்ள லியன் நிறுவனத்தில் திரில்லர் நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த கோட்  ஒன்று ஏலம் விடப்பட உள்ளது. அந்த கோட் ரூ.1கோடிக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கோட் சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்திலானது. இது பிரபல ஆடை வடிவமைப்பு நிபுணர் டென்னிஸ் தாம்கின்ஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்த தகவலை லியன் ஏல நிறுவனத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்