முக்கிய செய்திகள்

சட்டபேரவையில் விஜயகாந்த் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 9 - 1972 முதல் காவிரி நிதிநீர் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளில் தி.மு.க.வால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது என்று சட்டபேரவையில் விஜயகாந்த் குற்றம் சாட்டினார். சட்டபேரவையில் இலங்கை பிரச்சினை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியதாவது:-
இந்த தீர்மானத்தை கொண்டு வந்ததற்காக முதலில் முதல்வருக்கு நன்றி கூறுகிறோம். இந்த தீர்மானத்தை முழு மனதுடன் வரவேற்கிறோம். அதே நேரத்தில் இதுதொடர்பாக எனது எண்ணத்தை இந்த சபையில் பதிவு செய்ய விரும்புகிறேன். இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது முந்தைய தி.மு.க. அரசின் முதல்வர் உண்ணாவிரதம் இருந்தார். அன்று மாலையிலேயே  இலங்கையில் போர் நின்றுவிட்டது என்று பேட்டியளித்தார்.
மறுநாள் இலங்கையில் போர் தொடர்வதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பதிலளித்த அவர் மழை விட்டாலும் இன்னும் தூவனம் விடவில்லை என்று கூறினார்.
எப்படியோ இலங்கையில் தமிழ் இனத்தை அழித்த பெருமை கடந்த தி.மு.க. ஆட்சிக்கே உண்டு. இறுதிக்கட்ட போரின் போது எந்ததொரு எதிர்ப்பு குரலையும் முந்தைய தி.மு.க. அரசு எழுப்பவில்லை என்பதே உண்மை. போருக்கு முன்னர் அங்கு 8 லட்சம் தமிழ் மக்கள் இருந்தனர். இவர்களில் 4 லட்சம் பேரை இப்போது காணவில்லை.
இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக எடுத்துக் கொண்டாலும் மீதி தமிழர்களின் கதி என்ன? இதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே தெரியாது வெளிநாடு போயிருக்கலாம் என்கிறார்.
இங்கு பேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்திய அரசின் மீது பழி போட வேண்டாம் என்றார்கள். ஆனால் 1972 முதல் காவிரி நிதி நீர் உள்ளிட்ட பிரச்சினைகளில் தி.மு.க.வால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வந்துள்ளது.
கடந்த ஆட்சியில் எங்களுக்கு சட்டசபையில் பேசவே வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அப்படியே பேசினாலும் அடிக்கடி இடையூறு செய்து அமர வைத்து விடுவார்கள். இப்போது எங்களுக்கு பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே, எங்கள் எண்ணத்தை நாங்கள் பதிவு செய்கிறோம்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: