பெண்களுக்கு இலவச சேலை - கோகுலஇந்திரா வழங்கினார்

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      அரசியல்
admk1

 

சென்னை, பிப்.26 - ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 100 பெண்களுக்கு இலவச சேலையை கோகுல இந்திரா வழங்கினார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின்  63-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ரத்ததானம், அன்னதானம், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

நேற்று காலை சென்னை பிராட்வேயில் உள்ள காளிகம்பாள் கோவிலில் கழக மகளிரணி செயலாளர் கோகுல இந்திரா கோவிலில் ஜெயலலிதா நீடுவி வாழ சிறப்பு பிரார்த்தனை, அபிஷேகம் செய்தார். 100 சுமங்கலி பெண்களுக்கு சேலை வழங்கினார்.

பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி, தென் சென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதி ரங்கசாமி, ராயபுரம் பகுதி மகளிரணி செயலாளர் நாகம்மா, எழும்பூர் வேளங்கன்னி உள்பட ஏராளமான மகளிரணி நிர்வாகிகள் பெண்கள் கலந்து கொண்டனர்.

வடசென்னை மாவட்ட செயலாளர் டி.ஜெயக்குமார் காளிகம்பாள் கோவிலில் இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துறைமுகம் பகுதி முன்னாள் செயலாளர் திருநாவுக்கரசு சால்வை அணிவித்து வரவேற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: