முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரித்வி ஏவுகணை-11 வெற்றிகரமாக சோதனை

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

பாலசோர்,ஜூன்.10 - அணுஆயுதத்தை ஏந்தி சென்று எதிரிகளின் இலக்கை குறி தவறாமல் தாக்கி அழிக்கும் பிரித்வி ஏவுகணை 11 சோதனையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்தினர். உலகில் மாறிவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும் அண்டை நாடுகளான பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பெருக்கி வருவதையொட்டியும் இந்தியாவும் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி பிரமாஷ், அக்னி, பிரித்வி போன்ற ஏவுகணைகளை இந்திய விஞ்ஞானிகள் தயாரித்து வெற்றிகரமாக சோதித்து வருகிறார்கள். நேற்று ஒரிசா மாநிலம் பாலசோர் அருகே கடல் பகுதியில் இருக்கும் சண்டிபூர் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலையில் சரியாக 9.5 மணிக்கு பிரத்வி ஏவுகணை 11 சோதனையை வெற்றிகரமாக நடத்தினர். இந்த ஏவுகணையானது அணுஆயுதத்தை ஏந்தி 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் எதிரிகளின் இலக்கை குறிதவறாமல் தாக்கவல்லது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிரித்வி ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி இந்தியா இரண்டு அணு ஆயுத திறன் கொண்ட பிரித்வி ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை நடத்தியது. இந்த ஏவுகணைகள் வெவ்வேறு இலக்குத் தூரங்களை வைத்து ஐ.டி.ஆர். தளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டன. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த சோதனையை நடத்தினர். நேற்று பிரித்வி ஏவுகணை 11 சோதனையையொட்டி வங்க கடலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதற்கு முன்பு நடத்தப்பட்ட பிரித்வி ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. நேற்று நடத்தப்பட்ட் பிரித்வி ஏவுகணை 11-ன் நீளம் 9 மீட்டராகும். ஒரு மீட்டர் அகலம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்