ரயில்வே துறையில் 57 ஆயிரத்து 630 கோடி முதலீடு

mamta

 

புதுடெல்லி,பிப்.26 - நடப்பு 2011-2012-ம் ஆண்டில் ரயில்வே துறையில் ரூ. 57 ஆயிரத்து 630 கோடி முதலீடு செய்யப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 2011-2012-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து கூறியதாவது:-

நடப்பு 2011-2012-ம் ஆண்டில் ரயில்வே துறையில் ரூ. 57 ஆயிரத்து 630 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்படும். கடந்தாண்டு நாட்டில் 2 பெரிய ரயில் விபத்துக்கள் ஏற்பட்டன. இதனால் உயிர்ப்பலி அதிகமாகியது. இதற்கு என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இரண்டு ரயில் விபத்துக்களும் நாசவேலையால் ஏற்பட்டது. விபத்துக்களை தடுக்க மேலும் 3 ரயில்வே மண்டலங்களில் ரயில் மோதல் தடுப்பு கருவிகள் பொருத்தப்படும். ரயில் விபத்து குறைவாக நடக்கும் மாநிலங்களில் ஊக்கத்தொகையாக அந்த மாநிலங்களில் 2 ஸ்பெஷல் ரயில்கள் விடப்படும். நாட்டில் 442 ரயில்வே நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 584 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணி வரும் 2012-ம் ஆண்டிற்குள் முடிவடைந்துவிடும். மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் புதிய ரயில்வே தொழில்பூங்கா அமைக்கப்படும். கொல்கத்தாவில் மெட்ரோ கோட்ச் தொழிற்சாலை தொடங்கப்படும். சிங்கூரிலும் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கும் திட்டம் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கியாஸ் மூலம் 700 மெகாவாட் மின்சார உற்பத்தி நிலையம் தொடங்கப்படும். ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து மம்தா பானர்ஜி இவ்வாறு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ