முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒரு நாள் போட்டி: இந்தியா மே.இ.தீவை வீழ்த்தியது

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

டிரினிடாட், ஜூன். 10 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டிரினிடாட்டில் நடைபெற்ற 2 - வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாச த்தில் (டக் வொர்த் லீவிஸ் முறைப்படி)அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் 2 - 0 என்ற முன்னிலையை பெற்றுள்ளது. 

இந்தப் போட்டியில் இந்திய அணி தரப்பில், விராட் கோக்லி மற்றும் துவக்க வீரரான பார்த்திவ் படேல் இருவரும் அதிரடியாக ஆடி, அரை சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். கேப்டன் ரெய்னா அவர்களுக்கு பக்கபலமாக ஆடினார். 

முன்னதாக பெளலிங்கின் போது, முன்னணி சுழற் பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா வெகு நேர்த்தியாக பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். படேல் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் அவருக் கு ஆதரவாக பந்து வீசினர். 

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதன் 2 - வது போட்டி டிரினிடாட் தீவில் போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் உள்ள குவீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்தது. 

இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில், சிம்மன்ஸ் மற்றும் எட்வர்ட்ஸ் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் களம் இறங்கிய அந்த அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 240 ரன்னை எடுத்தது. அந்த அணி சார் பில், 2 வீரர்கள் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். 

மே.இ.தீவு அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சர்வான் அதிகப ட்சமாக 90 பந்தில் 56 ரன்னை எடுத்தார். துவக்க வீரர் சிம்மன்ஸ் 84 பந்தில் 53 ரன்னை எடுத்தார். தவிர, எட்வர்ட்ஸ் 28 பந்தில் 25 ரன்னையும், சாமுவேல்ஸ் 32 பந்தில் 36 ரன்னையும் எடுத்தனர். கேப்டன் சம் மி 22 ரன் எடுத்தார்.

இந்திய அணி சார்பில் அமித் மிஸ்ரா 31 ரன்னை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டைச் சாய்த்தார். முனாப் படேல் 35 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர யூசுப் பதான் 2 விக்கெட் எடுத்தார். 

பின்பு இந்திய அணி இன்னிங்சைத் துவக்கிய போது 2 முறை மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடை பட்டது. இதனால் இந்திய அணி 37 ஓவரில்  183 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கு நிர் ணயிக்கப்பட்டது. 

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 33.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பி ற்கு 183 ரன்னை எடுத்தது. இதனால் இந்திய அணி 20 பந்து மீதமிருக் கையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் முன்னி லை பெற்று உள்ளது. 

இந்திய அணி தரப்பில், விராட் கோக்லி அதிகபட்சமாக 103 பந்தில் 81 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். துவக் க வீரர் படேல் 64 பந்தில் 56 ரன்னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற் றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, கேப்டன் ரெய்னா 19 பந்தில் 26 ரன்னைஎடுத்தார். 

மே.இ.தீவு அணி சார்பில், ராம்பால் 32 ரன்னைக் கொடுத்து 1 விக்கெ ட் எடுத்தார். தவிர, பிஷூ மற்றும் மார்டின் ஆகியோர் தலா 1 விக்கெ ட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோக்லி தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்