முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்ணாவிரதம் - ராம்தேவ் உடல்நிலை மோசமடைகிறது

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

ஹரித்வார்,ஜூன்.10 - பாபா ராம்தேவ் நேற்று 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடையத்தொடங்கிவிட்டது. ஊழல் மற்றும் கறுப்புப்பணத்திற்கு எதிராக பாபா ராம்தேவ் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அவரையும் அவரது ஆதரவாளர்களையும் போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டனர். அப்படியிருந்தும் ஹரித்வார் சென்று தொடர்ந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார். நேற்றுமுன்தினம் 5-வது நாளே அவரது உடல் பாதிக்கத்தொடங்கியது. அதனால் பாபா ராம்தேவ் உண்ணாவிரத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் திரவ உணவையாவது உட்கொள்ள வேண்டும் என்று அவருக்கு டாக்டர்கள் ஆலோசனை கூறினர். அப்படி இருந்தும் பாபா ராம்தேவ் நேற்று 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். திரவ உணவு எதையும் அவர் உட்கொள்ளவில்லை. அதனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து வருகிறது. பாபா ராம்தேவ் எடை குறைந்துவிட்டது. உடலில் நீர்ச்சத்தும் குறைந்துவிட்டது. 

இதற்கிடையில் பாபா ராம்தேவை வலுக்கட்டாயமாக ராம்லீலா மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்காட்டில் உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசரே, ஊழல் மற்றும் கறுப்புப்பணத்திற்கு எதிராக போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார். வருகின்ற ஆக்ஸ்ட் மாதத்திற்குள் லோக்பால் மசோதைவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என்றும் ஹசரே எச்சரித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்