முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 11 - தமிழக காவல் துறையினர் இழந்த பழம் பெருமை விரைவில் மீட்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று சட்டப்பேரவையில்  ஆளுநர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு ஜெயலலிதா அளித்த பதில் வருமாறு:- சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுதல், குற்றங்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தருதல், குற்றங்கள் நிகழாமல் தடுத்தல், ஆகிய பணிகளை செவ்வனே செயல்படுத்த வேண்டுமெனில் தேவையான அளவு காவலர்களின் எண்ணிக்கை இருத்தல் அவசியமாகும். இந்தப் பணிகளை செய்ய வேண்டிய காவலர்கள் அதிகாரnullர்வமற்ற முறையில், அதாவது, சீடூச்க்க்டுஷடுஹங் ஆக வேறு பணிகளுக்கு அனுப்பப்பட்டால் சட்டம்​ஒழுங்கை நிலை நாட்டுவதை காவல் துறை எவ்வாறு செம்மையாக செடீநுய இயலும்? முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் வெளியே செல்லும் போதெல்லாம் பாதுகாப்பிற்காக காவலர்கள் சென்று கொண்டிருந்தால் அதிகாரnullர்வமாக அந்த காவல்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலையை யார்
செய்வார்கள்? முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பரந்து விரிந்த குடும்பத்தின் அங்கத்தினர்கள், மனைவி, துனைவி, மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் என ஏறக்குறைய 135 பேர் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் அதிகாரப்nullர்வமற்ற முறையில் சீடூ​ச்க்க்டுஷடுஹங்​ஆக காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள். 135 குடும்பத்தினருக்கும் பாதுகாப்பிற்கு
காவலர்கள் சென்று விட்டால் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களை கண்டுபிடிக்கவும் காவலர்கள் எங்கிருந்து வருவார்கள்? அதே போல, மத்திய அமைச்சர் அழகிரி வீட்டில் சீடூச்க்க்டுஷடுஹங் ஆக காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள். அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் அதாவது அவருடனேயே சுற்றித் திரியும் சில சமூக விரோதிகளுக்கும் சீடூச்க்க்டுஷடுஹங் ஆக காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள். மேலும், பல வணிக நிறுவனங்களிலும் தவறான முறையில் பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.
மேலும், முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புப் பணி என்ற போர்வையில், சென்னை மாநகரத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களிலும்; மதுரை மாநகரில், அரசியல் பிரமுகர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், செல்வாக்குடைய தனிப்பட்டோரின் சொந்த நலன் கருதி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னை போக்குவரத்து காவல்துறை காவலர்கள் அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை, சில முக்கியப் பிரமுகர்களின் போக்குவரத்து ஒழுங்குப் பணி என்ற போர்வையில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களிலும் அவற்றிற்கு இடையேயான வழித் தடங்களிலும் கடந்த 5 ஆண்டுகளாக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அக்காவலர்கள் திரும்ப அழைக்கப்பட்டு சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்துப் பணிகளில் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுவோர்; நில ஆக்கிரமிப்பு செய்வோர்; ரேஷன் பொருட்கள் கடத்துவோர்; மணல் கொள்ளையர்கள் போன்றோர் எந்தவித பயமுமின்றி முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் இத்தகைய சமூக விரோதச் செயல்களில்
ஈடுபட்டு வந்தார்கள் என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர். சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எவ்வித பாகுபாடும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த உத்தரவு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் கண்கூடாக பார்த்திருப்பீர்கள். இந்த மாமன்றத்தில் பேசிய சில மாண்புமிகு உறுப்பினர்களும் ஒரு சில உதாரணங்களைச் சுட்டிக்காட்டி இதை
தெரிவித்துள்ளனர்.
கடந்த தி.மு.க. ஆட்சியில், காவலர் முதல் காவல் துறை உயரதிகாரிகள் வரை எங்கு நியமிக்கப்பட வேண்டும் என்பது திரு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அன்றைய ஆளும் கட்சியினர், உள்ளூர் பிரமுகர்கள் ஆகியோரின் உத்தரவின் பேரில் முடிவு செய்யப்பட்டதால் காவல் துறையினர் மீதான உயரதிகாரிகளின் கட்டுப்பாடும், அரசின் கட்டுப்பாடும் சீர்குலைந்து போயிற்று. உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் கட்டளைக்கிணங்க காவல் துறை நடக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இவையெல்லாம் தற்போது nullக்கப்பட்டு விட்டன என்பதை இந்த மாமன்றத்தில் உள்ள nullங்கள் நன்கு அறிவீர்கள்.
சமூக விரோதிகள் சிலர் அரசியல் ஆதரவுடன் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு நிலம் மற்றும் சொத்துப் பிரச்சனைகளில் தலையிட்டு பொதுமக்களிடமிருந்து பணத்தை அபகரித்து வந்தனர். தனது சொத்தை ஒருவர் விற்க நினைத்தால் அந்த சொத்தை செல்வாக்கு உள்ள ஒரு சிலரின் அனுமதியின்றி ஒருவர் வாங்க இயலாத நிலை கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் இருந்தது. அந்தச் சொத்துக்களை செல்வாக்கு மிக்க நபர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்க நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையையும் மக்கள் நன்கு அறிவார்கள். அவ்வாறு கட்டாயமாக பிடுங்கப்பட்ட சொத்துக்களை மீட்பதற்குத் தான் தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்று ஆளுநர் உரையிலேயே தெரிவித்துள்ளோம். அந்தச் சட்டம் வெகு விரையில் இயற்றப்படும் என்ற உறுதியினை நான் இந்த மாமன்றத்திற்கு அளிக்கிறேன்.
கடந்த ஆட்சியில் நீnullராதாரம் பாதிக்கும் வகையில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி இயந்திரங்கள் மூலம் வரம்பின்றி மணல் அள்ளப்பட்டு பிற மாநிலங்களுக்கு கடத்தப்பட்டதை யாரும் தட்டிக் கேட்க இயலாத சூழ்நிலை நிலவியது. இவ்வாறு மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நான் உத்தரவிட்டதன் அடிப்படையில் நான் ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு வார காலத்திற்குள்ளாகவே மணல் கொள்ளையில் ஈடுபட்ட 897 பேர் கைது செய்யப்பட்டு nullதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 810 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 112 லாரிகள், 74 டிராக்டர்கள், 4  தானியங்கி பளுதூக்கும் லாரிகள், 2 தானியங்கி பாரமேற்றும் இயந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காவல் துறையினர் எவ்விதப் பாகுபாடும் இன்றி சட்டம்​ஒழுங்கை நிலை நாட்டுவதிலும், குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதிலும், குற்ற நிகடிநவுகள் நடைபெற்ற இடத்தில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும் முழு மூச்சுடன் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.
காவல் துறையினர் இழந்த பழம் பெருமை விரைவில் மீட்கப்படும் என்பதையும், தமிழகம் விரைவில் முழு அமைதிப் nullங்காவாக மாறும் என்பதையும் இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது உரையில் உறுதிபட தெரிவித்தார்
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago