முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை வரும்படி ராஜபக்சே அழைப்பு: மன்மோகன்சிங் ஏற்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

கொழும்பு,ஜூன்.- 12 - இலங்கை வரும்படி அதிபர் ராஜபக்சே விடுத்த அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டார். மன்மோகன் சிங் பயண திட்டம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இலங்கையில் நடந்த போரில் அப்பாவி தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் சிங்கள படையினரால் கொல்லப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து அகதிகளாக வாழ்ந்து கொண்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக மறுவாழ்வு அளிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ராமேஸ்வரம்,நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது சிங்கள கடற்படையினரால் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகிறார்கள். இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணவும் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ளுவது குறித்தும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளியுறவு செயலாளர் நிரூபமாராவ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் கொழும்பு சென்றனர். கொழும்பில் அதிபர் ராஜபக்சேவை அவர்கள் சந்தித்து பேசினர். பல்வேறு விஷயங்கள் குறித்த கடிதம் ஒன்றையும் ராஜபக்சேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கொடுத்துவிட்டார். அதையும் அவர்கள் ராஜபக்சேவுடன் கொடுத்துவிட்டனர். மேலும் இலங்கை வரவேண்டும் என்ற ராஜபக்சேயின் அழைப்பை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டார். இது குறித்தும் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது என்று ராஜபக்சேயின் செய்திதொடர்பாளர் பாண்டுலா ஜெயசேகரா நேற்று கொழும்பில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். ஆனால் இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் எப்போது பயணத்தை மேற்கொள்வார் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பில் சார்க் உச்சி மாநாடு நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு சென்றார். இதற்கிடையில் ராஜபக்சேவுடன் சிவசங்கர மேனன் சந்தித்து பேசிய விபரம் குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை. இருந்தபோதிலும் இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினைதான் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெற்றிருக்கும் என்று உறுதியாக தெரிகிறது. இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இலங்கைக்கு இந்திய உயரதிகாரிகள் சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. மேலும் கொழும்பு செல்லும்முன்பு முதல்வர் ஜெயலலிதாவை சிவசங்கர மேனன் சந்தித்து பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago