முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது நடந்த தாக்குதலில் 32 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

பெய்ரூட், ஜூன் - 12 - சிரியாவில் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.  சிரியாவில் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தை அடக்க சிரிய ராணுவம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மாரெட் அல் -நுமான் என்ற நகரில் பல்லாயிரக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் கண்டன போராட்டங்களை நடத்தினர். அப்போது நீதிமன்றங்களுக்கும் போலீஸ் நிலையங்களுக்கும் கிளர்ச்சியாளர்கள் தீவைத்தனர். இதையடுத்து அந்த நகரில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. கலவரக்காரர்களை அடக்க ராணுவத்தினர் டாங்கிகளைப் பயன்படுத்தி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். மேலும் கூட்டத்தினர் மீது துப்பாக்கியாலும் சரமாரியாக சுட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையில் குறைந்தபட்சம் 32 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. 

மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. சிரியாவில் கலவரத்திற்கு பயந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் துருக்கி எல்லைப் பகுதியில் கூடியுள்ளனர். இவர்கள் சிரியா எல்லையை தாண்டி துருக்கிக்குள் நுழைய முயற்சி செய்து வருகின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன. சிரியாவில் தொடர்ந்து ஆங்காங்கே கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்