முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைத் தமிழர் பிரச்சினை: கொழும்பில் இந்திய அதிகாரிகள் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

கொழும்பு,ஜூன்- .12 - இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க இலங்கை சென்றுள்ள இந்திய அதிகாரிகள், அந்நாட்டு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை களைய இந்திய தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பற்றி முதல்வரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக தெரிகிறது.
மேனன் தலைமையில் இந்திய அதிகாரிகள் கொழும்பு புறப்பட்டு சென்றனர். அக்குழுவில் இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், பாதுகாப்பு துறை செயலர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள். அக்குழுவினர் இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எல். பெரீசை சந்தித்து இரு தரப்பு உறவு தொடர்பான விவகாரங்கள் குறித்து பேசினர் என அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய அதிகாரிகள் குழு நேற்று சந்தித்து பேசியது. இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபய, அதிபரின் செயலர் லலித் வீரதுங்காவுடனும் அவர்கள் பேச்சு நடத்துவார்கள். பின்னர் அவர்கள் இந்தியா திரும்புகிறார்கள்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago