முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாசனத்திற்கு 14-ம் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை,ஜூன்.- 12 - பெரியாறு, வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, சேர்ரலார் ஆகிய அணைகளில் இருந்து பாசனத்திற்கு வரும் 14-ம் தேதி தண்ணீர் திறந்துவிடும்படி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் தொடங்கிவிட்டது. இதனால் பெரியாறு,வைகை,மேட்டூர், பாபாநாசம்,மணிமுத்தாறு,சேர்வலார் ஆகிய அணைகளுக்கு தண்ணீர்வரத்து தொடங்கிவிட்டது. மேலும் ஏற்கனவே அணைகளில் தண்ணீர் இருப்பும் இருந்தது. மேட்டூர் அணையில் 110 அடிக்கும்மேல் தண்ணீர் இருக்கிறது. அதனால் மேட்டூர் அணையை திறந்துவிடும்படி காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் முதல்வர் ஜெயலலிதாவை கேட்டுக்கொண்டனர். விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று கடந்த 6-ம் தேதி மேட்டூர் அணையை திறந்துவிடும்படி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி மேட்டூர் அணை திறக்கப்பட்டு தண்ணீர் காவிரி,கல்லணை, மற்றும் வெண்ணாறு பகுதிகளுக்கு சென்று விவசாய வேலைகளை விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளனர். அதேமாதிரி கண்ணியாகுமரி, நெல்லை மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் பாபாநாசம்,மணிமுத்தாறு,சேர்வலார் ஆகிய அணைகளுக்கு தண்ணீர்  வந்துகொண்டியிருக்கிறது. இந்த அணைகளிலும் தண்ணீர் ஏற்கனவே கனிசமான அளவு இருந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவை கேட்டுக்கொண்டனர். அதேமாதிரி தேனியையொட்டியுள்ள கேரள மாநிலத்தில் நல்லமழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 126 அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பு இருப்பதாக தெரிகிறது. அதேமாதிரி பெரியாறு அணைக்கு தண்ணீர் அதிகரித்தால் வைகை அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கும். வைகை அணையில் தற்போது 50 அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பு இருப்பதால் இந்த அணைகளையும் பாசனத்திற்காக திறந்துவிடும்படி அந்த பகுதி விவசாயிகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகளின் உணர்வுகளை புரிந்துகொண்ட முதல்வர் ஜெயலலிதா பெரியாறு, வைகை, மணிமுத்தாறு, சேர்வலார், பாபநாசம் ஆகிய அணைகளில் இருந்து வரும் 14-ம் தேதியில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரியாறு அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு தேனி மாவட்ட விவசாய பெருமக்களன் வேண்டுகோளினை ஏற்று, வரும் 14-ம் தேதி முதல் பெரியாறு அணையில் இருந்து 120 நாட்களுக்கு முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்