முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவை பாராட்டு வார்த்தைகள் இல்லை: ஏ.சி.சண்முகம் புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      தமிழகம்

சென்னை, ஜூன்.- 12 - இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்காக 2 புரட்சிகரமான தீர்மனங்களை கொண்டு வந்த ஜெயலலிதாவை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று ஏ.சி.சண்முகம் புகழாரம் சூட்டியுள்ளார். புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழினமும் மகிழ்ச்சிடையும் வகையில், தமிழக சட்டமன்றத்தில் இலங்கையில் இன படுகொலையை நிகழ்த்தி, போர்குற்றம் புரிந்தவர்களை போர்குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதார தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை கொண்டு வந்து, அனைத்து கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது.
உலக தமிழர்கள் அனைவரும் இன்றைய தினம் ஜெயலலிதாவுக்கு தங்கள் நன்றியை காணிக்கை ஆக்கி கொண்டிருக்கிறார்கள். இலங்கை பிரச்சனையில் விரைவில் சுமூக தீர்வு ஏற்படும் என்கின்ற நம்பிக்கை அனைவர் மனதிலும் ஏற்பட்டுள்ளது. தமிழர்களை பாதுகாக்க யாரும் இல்லை என்னும் நினைப்பில் அவர்களை அழித்து வரும் ராஜபக்சே இனியாவது தன்னை திருத்தி கொள்ள முன்வர வேண்டும்.
இலங்கை தமிழர்களின் துன்பம் தீர்க்க மத்திய அரசை நடவடிக்கை எடுக்க கோரிய ஜெயலலிதா சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவை மீட்கக்கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசின் வவுவாய் துறையையும் இணைத்திட வேண்டும் என்று, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கின்றார்கள்.
தமிழக மீனவர்கள் கடலில் மீன்படிக்க செல்லும்போது, இரவில் நமது எல்லை தெரியாமல் சென்று மீன் பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதும், அவர்களின் படகுகள் சேதப்படுத்தப்பட்டு உடமைகள் கொள்ளை அடிக்கப்படுவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட, கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்பதன் மூலம் தமிழக மீனவர்கலுக்கு நிரந்தர பாதுகாப்பினை உருவாக்கிட முயற்சியை மேற்கொண்டு வரும் ஜெயலலிதா தமிழர்களும், தமிழ் கூறும் நல்லுலகும் உள்ளவரை என்றென்றும் மறக்கமாட்டார்கள் நன்றி மலர்களை தூவி அவவது நல்லாட்சி தொடர வாழ்த்துவார்கள்.
தமிழர்களின் நலனில் இதுவரை யாருமே இவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிந்தித்து கூடபார்க்காத நிலையில், இப்படிப்பட்ட புரட்சிகரமான 2 தீர்மானங்களை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஜெயலலிதாவை பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஜெயலலிதாவின் துணிச்சல் மிக்க செயல்பாட்டினையும், சிக்கிலான பிரச்சனைகளையும் லாவகமாக கையாளும் தைரியமான நடைமுறையையும் இன்று உலகமேவியந்து பாராட்டுகின்றது. தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமின்றி, உலகின் எந்த மூலையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும், உடனே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வருக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony