முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளம் வீரர்கள் நெருக்கடியை சமாளிக்க மூத்த வீரர் விராட் கோக்லி அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      விளையாட்டு

புதுடெல்லி, ஜூன். - 12 - இளம் வீரர்கள் நெருக்கடியான சூழலை எளிதாக சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவின் இளம் அதிரடி ஆட்டக்காரரா   ன விராட் கோக்லி கூறியுள்ளார். இது பற்றிய விபரம் வருமாறு -  கேப்டன் சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய அணி மேற்கு இந் தியத் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் டேரன் சம்மி தலைமையிலான அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
மே.இ.தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. முதல் 2 போ  ட்டிகளைக் கைப்பற்றிய இந்திய அணி 2 - 0 என்ற முன்னிலை பெற்று உள்ளது.
இந்தியா மற்றும் மே.இ. தீவு அணிகளுக்கு இடையேயான 3 -வது போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெ ற்றி பெற்றதால் இந்தப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து ள்ளது.
இந்தத் தொடரின் 2 -வது போட்டியில் இந்திய அணியின் வெற்றியில் விராட் கோக்லியின் ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது. அவர் இந்தப் போட்டியில் 81 ரன்னை அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந் தார்.
விராட் கோக்லி இளம் வீரர்களுக்கு அளித்துள்ள அறிவுரையில் மேலு ம் கூறியதாவது - இளம் வீரர்கள் மூத்த வீரர்களின் ஆட்டநுணுக்கத்தை பின்பற்றக் கூடாது.
இளம் வீரர்கள் அவரவர் ஸ்டைலில் ஆடவேண்டும. இந்திய தொடக்க ஆட்டக் காரர் சேவாக்குடன் களம் இறங்கினால் கூட அவரது பாணியை நான் பின்பற்றுவதில்லை.
நாம் சச்சின், தோனி போன்ற மூத்த வீரர்களுடன் ஒப்பிட்டு ஆடக் கூடாது. அவர்களது ஆட்டத்தை பாராட்டினாலும் நாம் நாமாக ஆட வேண்டும். இந்திய அணியில் இடம் பெறுவது அவ்வளது எளிதல்ல.
எப்படியும் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று நானும் பெரிய அளவில் முன்னுரிமை தந்தேன். இந்திய அணியில் இடம் பிடித்த எனக்கு தொடக்கம் நன்றாக செயல்படவில்லை.
நான் மீண்டு வர யாரும் எனக்கு உதவவில்லை. நானாக முயற்சித்து நான் மீண்டும் சிறப்பாக ஆடத் தொடங்கினேன். இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் மட்டுமல்ல. வளரும் இளம் வீரர்களும் நெருக்க டியான நேரத்தில் சிறப்பாக ஆட பழக வேண்டும். இவ்வாறு கோலி கூறினார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்