முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி -கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஜி.கே.வாசன் தொடங்கிவைக்கிறார்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      தமிழகம்

புதுக்கோட்டை,ஜூன்.- 13 - தூத்துக்குடி -கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை இன்று  மத்தியஅமைச்சர் ஜி.கே. வாசன் தொடங்கிவைக்கிறார். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து 152 கடல் மைல்தொலைவுள்ள கொழும்பு துறைமுகத்துக்கு 12 அல்லது 14 மணி நேரத்தில் கப்பல் சென்றுவிடும். இந்தியா- இலங்கை எனஇருநாடுகளுக்கு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெறும் பட்சத்தில் இருநாடுகளிலும் சுற்றுலா வளர்ச்சி, வியாபார வளர்ச்சி மற்றும் கலைத்துறை வளர்ச்சிகள் மேம்படும், வர்த்தகம் பெருகும். தற்போது இருநாடுகளிடையே நட்புறவை வளர்க்கும் வகையில் தொடங்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கான வெள்ளோட்டம், ஆயத்தபணிகள் எல்லாம் நிறைவடைந்து, பயணிகள் சரக்குகட்டணம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை செல்வதற்கான பிளமிங்கோ பயணிகள் கப்பல்துறைமுகத்தில் தயாராக உள்ளது.
இன்று நடைபெறும் விழாவில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன் பங்கேற்று கப்பல் போக்குவரத்தை தொடங்கிவைக்கிறார்.
தூத்துக்குடி -கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதால் மீண்டும் தமிழகத்தின் தென்பகுதியில் மனதை மயக்கும் கொழும்பு கொப்பரை தேங்காய் எண்ணெயின் வாசம் வீசம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்