முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தூரில் தகவல் தொழில் நுட்புத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

விருதுநகர், ஜூன்.- 13 - தமிழகமே தனது குடும்பமாக கொண்டு அவர்களின் ஒவ்வொரு துயரையும் போக்கி, தமிழக மக்களின், ஏழைகளின் வாழ்வில் மிகுந்த அக்கறை கொண்டவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஆனால் தனது குடும்பத்தையே தமிழகமாக நினைத்து குடும்பத்தை மட்டும் கவனித்து தமிழகத்தையே புறக்கணித்தவர் கருணாநிதி என சாத்தூரில் நன்றி தெரிவிக்கும்போது தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். இதுபற்றிய விபரம் வருமாறு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பற்ற சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சருமான  ஆர்.பி.உதயகுமார் நேற்று சாத்தூர் நகர் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சாத்தூர் நகர் பகுதிகளில் பங்களாதெரு, மாரியம்மன்கோவில்தெரு, தென்வடல் புது தெரு, முருகன்கோவில் தெரு, காட்டு புது தெரு, வ.உ.சி.தெரு, பழைய படந்தால் ரோடு  ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
நன்றி தெரிவிப்பின்போது அவர் பேசுகையில் புரட்சித்தலைவி கழக நிரந்தர பொதுசெயலாளர்  தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி வராதா, தேர்தல் எப்போது வரும் என காத்திருந்து தமிழக முதல்வர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அதிமுக வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழகம் காக்கப்பட வேண்டும் என எண்ணி என்னை சாத்தூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ததற்கு நான் எனது முதல் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புரட்சித்தலைவி அம்மாவின் மீது எந்தளவிற்கு நம்பிக்கை வைத்துள்ளீர்களோ அந்த நம்பிக்கையை அவர் நன்கு அறிந்துள்ளார். தமிழகத்தை இருண்ட காலத்திலிருந்து பொற்காலமாக மாற்ற அல்லும் பகலும் சிந்தித்து திட்டங்களை தீட்டி வருகிறார். மின்வெட்டால் தவித்து வரும் மக்களின் துயரை போக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் முதல் முயற்சியாக வரும் ஜூலை மாதத்திலிருந்து 3 மணி நேர மின் தடை நேரம் 2 மணி நேரமாக்கப்படும் என தெரிவித்தார். மேலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறார். தமிழகத்தை முதன்மை மாவட்டமாக கொண்டு வர கடுமையாக உழைத்து வருகிறார்.
தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் கடைசி நிலை மக்கள் வரை அரசு திட்டங்களும், சலுகைகளும் சென்றடைய வேண்டும்படி பணியாற்ற வேண்டும் என எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆகையால் இனி நீங்கள் கவலை கொள்ளவில்லை. உங்கள் துயரை தீர்க்க தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா வந்துவிட்டார்.
சாத்தூர் தொகுதியில் எனது தகவல் தொழில் நுட்பத்துறை மூலம் என்னென்ன பயனடைய செய்ய முடியுமோ அனைத்தும் செய்வேன்.
சாத்தூர் மக்களின் கோரிக்கைகளை அனைத்தையும் என்னிடம் எந்த நேரமானாலும் சந்தித்து கொடுக்கலாம். உங்களுக்கு பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்துள்ளீர்கள். நிச்சயம் அதை நல்லமுறையில் செய்வேன். சாத்தூரில் பொருளாதார மண்டலம் கொண்டு வருவேன். தொகுதி மேம்பட பல திட்டங்களை கொண்டு வந்து முன்னேற்ற பாதையில் தொகுதியை கொண்டு வருவேன். தொகுதி குறைகள் அனைத்தும் களையபடும் என பேசினார்.
தமிழக முதல்வர் ஒருவரே தமிழகமே தனது குடும்பம் என கொண்டு அல்லும் பகலுமாக தமிழக மக்களின், ஏழைய எளிய மக்களின் வாழ்வில் பெரும் அக்கறை கொண்டு பணியாற்றும் ஒரே தமிழக முதல்வர். ஆனால் கடந்த மைனாரிட்டி திமுக அரசின் கருணாநிதியோ தனது குடும்பமே தமிழகமாக கருதி குடும்பத்தை மட்டும் கவனித்து தமிழகத்தை புறக்கணித்தவர் என பேசினார். அமீர்பாளையம் ராஜகாளியம்மன்கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தேவேந்திர வேளாளர் குல சமுதாயத்திற்கு சமுதாய கூடம் உடனடியாக கட்டித்தருவேன் என தெரிவித்தார்.
அமைச்சர் வருகையையொட்டி வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அமைச்சருடன் சாத்தூர் நகர செயலாளர் வாசன், தொகுதி செயலாளர் சேதுராம், ஒன்றிய செயலாளர் சுப்புராம், மாணவரணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், மகளிரணி மாவட்ட செயலாளர் கெளரி, நகர மாணவரணி செயலாளர் செல்வகணேஷ், நகர அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.டி.முனீஸ் உட்பட  கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony