தமிழக இரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு இல்லை - வைகோ

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      அரசியல்
vaiko 1

 

சென்னை, பிப்.26 - மத்திய இரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம், சரக்குகள் கட்டணம் உயர்த்தப்படாதது, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குச் சலுகைகள், இரயில்வே ஊழியர் நலனுக்கான திட்டங்கள்,  தமிழகத்துக்கு இரண்டு புதிய துரந்தோ இரயில் சேவைகள், மன்னார்குடி​புதுக்கோட்டை, கூடுவாஞ்சேரி​ஸ்ரீபெரும்புதூர் புதிய இரயில் பாதைகள் மற்றும் சென்னைக்குக் கூடுதல் மின் இரயில் போன்றவை வரவேற்கத் தக்கவை இருந்தாலும், தமிழ்நாட்டில் நீnullண்டகாலமாகப் பின்தங்கியுள்ள இரயில்வே திட்டங்களை நிறைவேற்ற எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

தலைநகர் சென்னையைத் தென் மாவட்டங்களுடன் இணைக்கும் சென்னை கன்னியாகுமரி முக்கிய வழித்தடத்தில் தாம்பரம்​விழுப்புரம் இரட்டைப் பாதைத் திட்டத்திற்கும், விழுப்புரம்​திண்டுக்கல் இடையேயான 272 கி.மீ. தூரம் இரட்டை இரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கும் குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால் தாமதமாகி வருகின்றன. 

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அகலப் பாதை அமைக்கும் திட்டங்கள், இரட்டை இரயில் பாதை, புதிய இரயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் போன்ற பல திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமையால் கிடப்பில் கிடக்கின்றன. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிடிநநாட்டில் இரயில்வே திட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன.

சென்னையிலிருந்து கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களுக்கும், சென்னை பெங்களூர் இடையேயும் தனிச் சரக்கு இரயில் பாதை அமைப்பதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று முந்தைய இரயில்வே பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பு இன்னும் செயலாக்கம் பெறவில்லை. சென்னையைப் போன்று கோவை, மதுரை போன்ற நகரங்களில் மின்சார இரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றப்படும் என்ற அறிவிப்பும், மாதிரி இரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு பயணிகளுக்கு

அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற திட்டங்களும் வெறும்

அறிவிப்போடு நின்றுவிட்டன.

இரயில் பயணிகள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தரமான உணவு குறித்த

மக்களின் கோரிக்கைகள் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. மாநில அரசின் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட்டு வரும் இரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்யாத தமிழக அரசின் அலட்சியத்தால் பல திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. போதிய நிதி ஒதுக்கீடு இன்றித் தமிழக இரயில்வே திட்டங்கள் ஆமை வேகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில், ஒரு சில புதிய இரயில்கள் பற்றிய அறிவிப்பு மட்டுமே தமிழ்நாட்டுக்கு முழு திருப்தி அளிக்காது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: