முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி மாறன் பதவியில் நீடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

ஐதராபாத், ஜூன் 14 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பதவியில் நீடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வலது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார். வலது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ஐதராபாத்தில் உள்ள வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மக்தூம் பவன் தலைமையகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இவர் இந்த பேட்டியை  அளித்தார். 2 ஜி.ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்துவருகிறார். அவர் மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து இருப்பதை நீண்டகாலத்திற்கு நியாயப்படுத்த முடியாது. அவர் தனது ஜவுளித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தே தீரவேண்டும். 2 ஜி. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் புதிதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த அமைச்சர் பதவி விலக பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளிக்க வேண்டும் என்றும் பரதன் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே காலதாமதமாகிவிட்ட நிலையில் மாறனை பதவியில் இருந்து விலக்க பிரதமர் மன்மோகன்சிங் மேலும் கால தாமதம் செய்யக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க இன்னொருபுறம் இந்த ஊழலில் மேலும் மேலும் மந்திரிகள் சிக்கி வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றும், புகாருக்கு உள்ளான தயாநிதி மாறன், இனியும் காலதாமதம் செய்யாமல் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பரதன் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony