முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தவ் தாக்கரேவுடன் கோபிநாத் முண்டே முக்கிய சந்திப்பு

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஜூன்.14 - சிசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை பாரதிய ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டே நேற்றுமுன்தினம் மும்பையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நிதீன்கட்காரிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் லோக்சபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் கோபிநாத் முண்டேவுக்கும் மோதல் போக்கு உருவாகி உள்ளது. இதனையொட்டி பாரதிய ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் முண்டே சேரப்போவதாக பேச்சு அடிபடுகிறது. 

இந்த நிலையில் சிவசேனா நிறுவனத்தலைவர் பால் தாக்கரேயின் மகனும் கட்சியின் நிர்வாக தலைவருமான உத்தவ் தாக்கரையை கோபிநாத் முண்டே நேற்றுமுன்தினம் மும்பையில் சந்தித்து பேசினார். மும்பை புறநகர் பகுதியில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஓட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை வீழ்த்த முடிவு செய்து பாரதிய ஜனதா சிவசேனா கட்சிகளிடையே கூட்டணியை ஏற்படுத்த கோபிநாத் முண்டே முக்கிய பங்கு வகித்தவர். அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் வெற்றிவாய்ப்பு குறையும் என்று உத்தவ் தாக்கரே உணர்ந்திருப்பதாக சிவசேனா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகர் உள்பட பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் பாரதிய ஜனதா நிர்வாகிகளை நியமிப்பதில் நிதீன்கட்காரிக்கும் கோபிநாத் முண்டேவுக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony