முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திகார் ஜெயிலில் தொழிலதிபரிடம் செல்போன் பறிமுதல்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.14 - ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் ஜெயிலில் இருக்கும் தொழிலதிபரிடம் செல்போன் சிக்கியது.ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்நாள் மத்திய மந்திரி ராசாவுடன் ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் பல்வா, குசேகான் புரூட்ஸ் நிறுவன இயக்குனர் ராஜிவ் அகர்வால் ஆகியோர் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ராஜிவ் அகர்வாலிடம் செல்போன் இருந்தது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மாதம் அகர்வாலை கோர்ட்டில் ஆஜர் படுத்திவிட்டு மீண்டும் சிறையில் அடைக்க கொண்டு சென்றனர். அப்போது சிறை அதிகாரிகள் அகர்வாலை சோதனையிட்ட போது அவரிடமிருந்து பிளாக்பெரி மொபைல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை நடத்தியதில் அந்த செல் ஷாகித்பல்வாவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அந்த செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை பயன்படுத்தி இருவரும் வெளியிடங்களுக்கு பேசியிருக்கிறார்கள் இதையடுத்து ஒரே அறையில் இருந்த இருவரும் தனித்தனி அறைகளுக்கு மாற்றப்பட்டனர்.மேலும் சிறையில் ராஜிவ் அகர்வாலை உறவினர்கள் சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஜெயில் சூப்பிரண்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு திகார் ஜெயில் டைரக்டர் ஜெனரல் நீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கலைஞர் டி.விக்கு ரூ.200 கோடி பணம் கைமாறியது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி ராஜிவ் அகர்வால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony