முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி கட்டணம்: ரவிராஜபாண்டியன் குழு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன், 14 - தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை நிர்ணயித்து எந்தெந்த பள்ளிகளுக்கு எவ்வளவு கட்டணம் என்ற விவரங்களை ரவிராஜபாண்டியன் குழு நேற்று அறிவித்தது. தமிழகத்திலுள்ள தனியார் சுயநிதிப்பள்ளிகளில் கல்வி கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதாக பெற்றோர்கள் அளித்த தொடர் புகார்களை தொடர்ந்து தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு கட்டணங்களை நிர்ணயித்தது.

இந்த கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், இதைகொண்டு பள்ளிகளை நடத்த முடியாது என்றும் தனியார் பள்ளிகள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த அமர்வு,  சுயநிதி பள்ளிகளின் கட்டண நிர்ணயக் குழுவிடம் மேல்முறையீடு செய்த 6,400 பள்ளிகளுக்கு நேரிடைக் கேட்பு நடத்தி இறுதியாணை வழங்குமாறு தீர்ப்பளித்தது.

நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையில் கல்வி கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டு, இந்த குழுவினர் மாவட்ட வாரியாக பள்ளி நிர்வாகிகளை அழைத்து அவர்களிடம் கருத்துகளை கேட்டுப்பெற்றனர். 

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு அரசு கட்டண நிர்ணயச் சட்டத்தின்படி கட்டண நிர்ணயம் செய்வதற்கு பள்ளியின் அங்கீகாரம் இன்றியமையாதது என்பதால் அங்கீகார ஆணை சரிபார்க்கப்பட்டது. அங்கீகாரத்தின் அவசியத்தை இந்த குழு வலியுறுத்தியதால், தொடர் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்து நிலுவையில் இருந்த ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அங்கீகார ஆணைகள் அனுப்பப்பெற்றன. கட்டண நிர்ணய சட்டத்தின்படி அங்கீகாரம் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே கட்டண நிர்ணயம் பொருந்தும் என்று ஆணையில் குறிப்பிடப்பட்டு அதன்படி அந்த பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.ஈ. பள்ளிகள், ஐ.சி.எஸ்.ஈ. பள்ளிகள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஒரு பகுதி அரசு நிதியுதவி பெற்று, ஒருபகுதி சுயநிதி பிரிவின் கீழ் செயல்படும் பள்ளிகள் ஆகிய அனைத்தும் தனியார் பள்ளிகள் என்ற அமைப்பில் இடம்பெற்று கட்டண நிர்ணய சட்டத்தின்படி புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்துக்கு உரியது என்பதை இக்குழு தெளிவாக்கியுள்ளது.

பள்ளியின் அமைவிடம், மாணவர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பணியாளர் ஊதியம், நிர்வாக, பராமரிப்பு செலவுகள் ஆகிய அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த மறு கட்டண நிர்ணய ஆணை 3 ஆண்டுகளுக்கு (2010-11, 2011-12, 2012-13)  பொருத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளை திறப்பதற்கு முன்பாக இந்த குழு கட்டண நிர்ணயத்தை அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்த்துவந்த பெற்றோர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு நேற்று கல்வி கட்டணங்களை நிர்ணயித்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த குழுவிடமிருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் எவ்வளவு கல்வி கட்டணம் என்ற விவரங்கள் சீலிடப்பட்ட கவரில் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த கட்டணங்கள் குறித்த விவரங்கள் விரைவில் பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago