முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முருகப்பெருமான் கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், ஜூன்.13 - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடந்தது. முருகபெருமானின் முதல்படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சிப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது வைகாசி விசாக திருவிழா ஆகும். இத்திருவிழா ஆண்டு தோறும் வைகாசி மாதம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் அத்திருவிழா கடந்த 4ம் தேதி துவங்கியது. அன்றைய தினம் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. வழக்கமாக வைகாசி விசாக திருவிழா நடைபெறும் 10 நாட்களில் ஒன்பது நாட்கள், கோயிலுக்குள் உள்ள வசந்த மண்டபத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு மேடையில் ஊஞ்சல் அமைக்கப்படும். உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு மல்லிகைப்பூ அலங்காரமாகி தினம் இரவு 7 மணிக்கு வசந்த மண்டப ஊஞ்சலில் எழுந்தருள்வர். அன்று 30 நிமிடங்கள் வசந்த உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு ஜூன் 6ம் தேதி கோயிலில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு  48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடக்கிறது. அதனால் இந்த ஆண்டு வசந்த உற்சவம் இல்லை. 

வைகாசி விசாகம் : விசாகத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு, கோயிலுக்குள் சண்முக சன்னதியில் எழுந்தருளியுள்ள ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுவாமிகள் கம்பத்தடி மண்டபத்திலுள்ள விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினர். மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதியிலிருந்த தலையில் சுமந்த கொண்டு வரும் குடங்களிலுள்ள பால், சுவாமிக்கு காலை 7மணி முதல் பகல் 2.30 மணி வரையில் தொடர்ந்து குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது. விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் மட்டுமின்றி, முகத்தில் ஓரடி முதல் 20 அடி வரை அலகு குத்தியும், பறவை காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி உட்பட பல்வேறு காவடிகளை சுமந்து பாதயாத்திரையாக திருப்பரங்குன்றம் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 

இன்று காலையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையம்மன் தங்க மயில் வாகனத்தில் சட்டத்தேரில் எழுந்தருளி மொட்டை அரசு திடலை அடைவர். அங்கு மொட்டையரசு திருவிழா முழிந்து வழி நெடுகிலும் அமைக்கப்பட்டிருக்கும் பக்தர்களின் திருக்கண் மண்டகபடிகளில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கோயில் சேர்த்தி சென்றடைவர்.

 

ஆண்டுக்கு ஒரு நாள் இடம் மாறும் சண்முகர் :

 

சண்முகர் சந்நிதியில் எழுந்தருளியுள்ள ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு லட்சார்ச்சனைகள், கந்த சஷ்டி திருவிழாவின் போது தினம் இருவேளை சண்முகார்ச்சனை நடைபெறும். வைகாசி விசாக தினத்தன்று மட்டும் சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் சந்நதியிலிருந்து விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருள்வார். இது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்