முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்யம் கட்சிக்கு 2 மந்திரி பதவி

புதன்கிழமை, 15 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

நகரி,ஜூன்.15 - காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த நடிகர் சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்யம் கட்சிக்கு 2 மந்திரி பதவி தர காங்கிரஸ் சம்மதித்துள்ளது. சிரஞ்சீவி தனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பிரஜ்ஜா ராஜ்யம் கட்சியை தொடங்கினார். அவரது கட்சிக்கு 17 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் சில மாதங்களுக்கு முன்பு தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று பிரஜ்ஜா ராஜ்யம் கட்சியை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். 

சிரஞ்சீவி காங்கிரஸ் மேலிட நிர்வாகிகளிடம் தனது கட்சிக்கு 4 மந்திரி பதவிகள் வேண்டும் என்றும், ஒரு மத்திய அமைச்சர் பதவியும் வேண்டும் என்று கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் அவருக்கு 2 மந்திரி பதவிகள் கொடுப்பதாகவும் மத்திய அமைச்சர் பதவி தர இயலாது என்றும் கூறி விட்டது. இருந்தும் சிரஞ்சீவி மத்திய அமைச்சர் பதவியை பெற தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். அவரது நண்பர் ஒருவர் கூறுகையில், 

சிரஞ்சீவிக்கு மாநில அமைச்சராவதில் விருப்பம் இல்லை என்றும் மத்திய மந்திரியாகவே விரும்புகிறார் என்றும் இதனால் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்