முக்கிய செய்திகள்

விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு முன்ஜாமீன்

புதன்கிழமை, 15 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

மதுரை,ஜூன்.15 - தேர்தல் பிரசாரத்தின் போது அதிக வாகனங்களில் சென்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்திய வழக்குகளில் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை முன்ஜாமீன் வழங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா கடந்த மார்ச் 30 -ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிகளுக்கு புறம்பாக அதிக வாகனகளில் சென்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாக ஒட்டன்சத்திரம் தாடிக்கொம்பு, கன்னிவாடி, செம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களில் பிரேமலதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட் மதுரைக்கிளையில் பிரேமலதா மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிபதி ராமநாதன் முன்னிலையில் நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் 15 நாட்களுக்குள் பிரேமலதா ஆஜராகி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என உத்தவிட்டு, 4 வழக்குகளிலும் அவருக்கு முன்ஜாமீன் வழங்கினார்.  இந்த 4 வழக்குகளில் ஐகோர்ட் மதுரைக்கிளையில் கடந்த 11 -ம் தேதி அவர் முன் ஜாமீன் வாங்கினார். இந்நிலையில் 15 நாட்களுக்குள் அவர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனையடுத்து இரண்டாவது முறையாக முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனடிப்படையில் ஐகோர்ட் கிளை நேற்று மீண்டும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: