முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாஜி ஐ.ஜி.க்கு ஆயுள் தண்டனை: கேரள ஐகோர்ட்டு உறுதி செய்தது

புதன்கிழமை, 15 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

கொச்சி, ஜூன் 15 - நக்சலைட்டு தலைவர் வர்க்கீஸ் என்பவரை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்காக கேரள முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஒருவருக்கு சி.பி.ஐ. கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை கேரள ஐகோர்ட்டு உறுதி செய்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் நக்சலைட்டு தலைவர் ஏ.வர்க்கீஸ் என்பவர் போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூரமான கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான மறைந்த ராமச்சந்திரன் நாயர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ஒரு போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தபோது, தனது மேல் அதிகாரிகளின் உத்தரவின்படிதான் வர்க்கீஸை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக கூறியிருந்தார். இதையடுத்து அப்போதைய போலீஸ் ஐ.ஜி. லட்சுமணன் என்பவர் மீதும், முன்னாள் டி.ஜி.பி. பி. விஜயன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. கோர்ட்டு லட்சுமணனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதேசமயம் டி.ஜி.பி. விஜயனை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தது. இந்த வழக்கில் லட்சுமணனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்றும், டி.ஜி.பி. விஜயனை விடுதலை செய்ததை எதிர்த்தும் வர்க்கீசின் சகோதரர் தாமஸ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் மறுபரிசீலனை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை கேரள ஐகோர்ட்டு நிராகரித்தது. மேலும் இதே ஐகோர்ட்டில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து லட்சுமணன் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு மீது நீதிபதிகள்  தோட்டத்தில் பி.ராதாகிருஷ்ணன், எஸ்.சதீஷ் சந்ரா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரணை நடத்தி முன்னாள் ஐ.ஜி. லட்சுமணனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை செல்லும் என்று கூறி தீர்ப்பளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்