முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

புதன்கிழமை, 15 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.15 - புதிதாக துவங்கப்படும் தனியார் மருத்துவக்கல்லூரிகளிடம் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு எம்.பி.பி.எஸ். இடங்களை கூடுதலாக கேட்டு பெற்றிட வேண்டும் என தமிழக அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதியை நடப்பு ஆண்டில் பெற்றுள்ள சேலம் அன்னnullரனா மருத்துவக்கல்லூரி,பெரம்பலூர் தனலக்குமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி போன்ற புதிய தனியார் மருத்துவக்கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டிற்கு எம்.பி.பி.எஸ் இடங்களை தரத்தயங்குவது  கண்டனத்திற்குரியது.

அரசு ஒதுக்கீட்டிற்கு எம்.பி.பி.எஸ் இடங்களை கடந்த ஆண்டு டி.டி மருத்துவக்கல்லூரியும் வழங்கவில்லை.இது சமூக nullநீதிக்கு எதிரானது. தனியார் கல்லூரிகளிலும் இடஒதுக்கீடு வழங்கவேண் டும் என்ற சட்டத்தை மீறும் நடவடிக்கையாகும். அரசிடமிருந்தும், சமூக சொத்திலிருந்தும் நிலம், மின்சாரம், தண்ணீர், வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அனுபவிக்கும் இக்கல்லூரி நிறுவனங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு இடங்களை வழங்கமாட்டோம் என்பது அராஜக நட வடிக்கையாகும். 

எனவே, இக்கல்வி நிறுவனங்களிலிருந்து எம்.பி.பி.எஸ் இடங்களைப் பெற உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திட வேண்டும். 

அரசு மருத்துவக் கல்லூரிகளான சென்னையில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி போன்றவற்றில் தலா 100 இடங்களையும், கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் 50 இடங்களையும் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலம் கூடுதலாக 250 எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைக்கும். 

எனவே இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.    தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களிலும் அரசு  ஒதுக்கீட்டிற்கான இடங்களைப் பெற்றிடும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றிட வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்