முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு அணையை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

புதன்கிழமை, 15 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

கம்பம்,ஜீன்.15 - பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு முதல் போக விவசாயத்திற்காக நேற்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தண்ணீர் திறந்து வைத்தார்.5 மாவட்டங்களின் விவசாயம் முல்லைபெரியாறு அணை நீரை நம்பியே உள்ளது.தமிழகத்தின் நெற் களஞ்சியமான தஞ்சைக்கு அடுத்து தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் நெல் இருபோக சாகுபடி செய்யப்படுகிறது.முதல் போக சாகுபடிக்காக பெரியாறு அணையில் இருந்த ஆண்டு தோறும் ஜீன் முதல் தேதிதண்ணீர் திறந்து விடப்படும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை தவறியதால் விவசாயத்திற்காக தண்ணீர் தாமதமாக திறந்து விடப்பட்டது.கடந்த 2009-ஆம் ஆண்டில் அணையின் நீர் மட்டம் 114.60 அடியாக இருந்த போது ஜீலை 13-ஆம் தேதியிலும் 2010 ல் அணையின் நீர் மட்டம்115.10 அடியாக இருந்த போது ஜீன் 18-ஆம் தேதியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.இந்த ஆண்டுஜீன் முதல் நாளில் அணையின் நீர்மட்டம் 119.50 அடியாக இருந்தது.இந்நிலையில் தமிழக முதல்வர்ஜெ.ஜெயலலிதா உத்தரவின் படி நேற்று மதியம் 12.30 மணிக்கு முதல் போக சாகுபடிககாக வினாடிக்கு 200 கன அடி வீதம் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.பின்பு நிருபர்களிடம் நிதியமைச்சர் கூறியதாவது:மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் உத்தரவின் பேரில் பெரியாறு அணையிலிருந்து 14.6.2011 முதல் 120 நாட்களுக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.விவசாயிகள் குறுகிய காலப்பயிர்களை நடவு செய்தும்,தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை அடைய பொதுப்பணித்துறையுடன் விவசாயிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிச்சாமி கூறுகையில்:மேலும் பருவமழை தவறி பெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லையெனில் நீர் இருப்பைக் கணக்கில் கொண்டு முறைப்பாசனம் தேவைக்கு ஏற்ப அமல்படுத்தப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் தேனி மாவட்ட அதிமுக செயலாளரும் ,ஆண்டிபட்டி எம்.எல்.ஏ வுமான தங்கதமிழ்செல்வன்,மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி ,பெரியாறு அணை செயற்பொறியாளர் ராஜேஷ் உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன் ,பெரியாறு வைகை அணை செயற்பொறியாளர் விஜயகுமார் ,5 மாவட்ட விவசாய சங்க செயலாளர் கே.எம்.அப்பாஸ்,விவசாய சங்க தலைவர் தர்வேஸ் மைதீன்,நாராயணன்,உத்தமபாளையம்  தாசில்தார் சூர்யகலா,ஆர்.டி.ஓ.கண்ணன்,உள்ளிட்ட அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்