இந்தியாவில் தேர்தல் பயிற்சி பெற உலக நாடுகல் விருப்பம்

India-Elec

 

வாஷிங்டன்,பிப்.27 - இந்தியாவில் தேர்தல் பயிற்சி பெற உலக நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா ஷங்கர் தெரிவித்துள்ளார். 

உலகிலேயே இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடாகும். இங்கு கடந்த 1952-ம் ஆண்டில் இருந்து ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இது உலக நாடுகளுக்கு பெரும் வியப்பை அளித்துள்ளது. அதனால் இந்தியாவில் தேர்தல் நடத்தும் முறையை அறிந்துகொள்ள உலக நாடுகள் விரும்புவதோடு பயிற்சியும் பெற ஆர்வமாக இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக 3-ம் உலக நாடுகள், இந்தியாவில் தேர்தல் பயிற்சி பெற விருப்பம் தெரிவித்துள்ளன என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா ஷங்கர் நேற்று வாஷிங்டன்னில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இந்திய தேர்தல் கமிஷனானது ஒரு தேர்தல் பயிற்சி நிலையத்தை ஏற்படுத்தி 3-ம் நாடுகளுக்கு தேர்தல் பயிற்சி அளிக்க உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். முதலில் உள்நாட்டில் அரசு ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். அதனையடுத்து இதர நாட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நம்முடைய தேர்தல் தேவைகள் பூர்த்தியானவுடன் இதர நாட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் ஷங்கர் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ