முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் தொகுதியில் முதல்வர் 3 நாள் சுற்றுபயணம்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.16 - தமிழக முதல்வர் ஜெயலலிதா 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் ஸ்ரீரங்கம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது தம்மை அமோக வெற்றிபெறச்செய்த தொகுதி வாக்காள பெருமக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறார். முந்தைய தி.மு.க. மைனாரிட்டி ஆட்யின் ஏதேச்சதிகாரத்தால் மக்கள் வெறுப்படைந்த நிலையில் இருந்தனர். எப்படா சட்டமன்ற தேர்தல் வரும் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டியிருந்தனர். தேர்தலுக்கு முன்பாக கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் அ.தி.மு.க. கூட்டங்கள் நடைபெற்றன. அந்த கூட்டங்களில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்துகொண்டு பேசினார். அந்த கூட்டங்களில் தமிழக வரலாற்றில் இல்லாத நிலைக்கு மக்கள் கூடி ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.  இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. தேர்தலில் பணம் கொடுத்து எப்படியும் வெற்றிபெற்று வரலாம் என்று தி.மு.க. வினர் கனவுகண்டு கொண்டியிருந்தனர். இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க. சார்பில் புகார் செய்யப்பட்டது. மேலும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜெயலலிதா யுக்தி வகுத்து செயல்பட்டார். சட்டசபை தேர்தலில்  ஆண்டிபட்டி, சென்னை, திருச்சி, கோவை உள்பட 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்களும் நிர்வாகிகளும் தங்களுடைய தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதாவை கேட்டுக்கொண்டனர். ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றியை கருத்தில் கொண்டு திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டாலும் தமிழகம் முழுவதும் 20 நாட்களாக சூறாவளி பிரசாரம் செய்து அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். ஜெயலலிதாவுக்கு செனற இடமெல்லாம் மக்கள் கடலென திரண்டு ஆதரவு கொடுத்தனர். பிரசாரத்தின்போது தி.மு.க. ஆட்சியின் ஊழல், மத்தியில் நடந்த 2ஞி ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்சார பற்றாக்குறை ஆகியவற்றை மக்களிடத்தில் எடுத்துக்கூறினார். தேர்தல் நடந்து மே மாதம் 13-ம் .தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் அ.தி.மு.க. மட்டும் 145 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வராக பதவி ஏற்றார். பதவி ஏற்றவுடன்,அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் தங்களுடைய தொகுதிகளுக்கு உடனடியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்படி முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். நன்றி தெரிவிக்கும்போது பிரமாண்டமான முறையில் விழா எடுக்காமல் எளிமையாக கூறும்படியும் கேட்டுக்கொண்டார். முதல்வராக மீண்டும் பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவுக்கு நிர்வாகத்தில் உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டியிருந்ததாலும், சட்டசபை கூட்டம் நடந்து கொண்டியிருந்ததாலும் டெல்லிக்கு செல்லவிருந்ததாலும் அவர் உடனடியாக தாம் போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வந்து மக்களுக்கு நன்றி தெரிவிக்க முடியவில்லை. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய ஜெயலலிதா தன்னுடைய தொகுதி மக்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால் ஸ்ரீரங்கம் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாக்களித்து, அவரை மகத்தான வெற்றி பெறச் செய்த ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வரும் 19-ம் தேதி அன்று காலை பயணம் மேற்கொள்கிறார். முதல் நாள் நிகழ்ச்சியாக 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறவுள்ள  அரசு விழாவில் ஸ்ரீரங்கம் தொகுதியில் செயல்படுத்தப்படவுள்ள பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அடுத்த நாள் (திங்கட்கிழமை) அந்தநல்லூர் ஒன்றியத்தில் கிராமந்தோறும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

அதன்பின்னர் 21-ம் தேதி  (செவ்வாய்க்கிழமை) மணிகண்டம் ஒன்றியத்தில் கிராமந்தோறும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அன்று இரவே சென்னை திரும்புகிறார்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்