சீன செல்போனில் பேசியவர் மின்சாரம் தாக்கி சாவு

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ஆமதாபாத்,ஜூன்.16 - இந்தியாவில் சீன செல்போன்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. எனவே ஏராளமானோர் இதை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் சில சமயங்களில் இவை ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றன. குஜராத்தில் இதனை பயன்படுத்திய ஒருவர் பலியாகி உள்ளார். குஜராத் மாநிலம் பாரூத் என்ற இடத்தை சேர்ந்தவர் தாமோதர். இவரிடம் சீன செல்போன் இருந்தது. சார்ஜ் ஏற்றுவதற்காக மின் இணைப்பில் செல்போனை போட்டிருந்த தாமோதர், ஒரு அழைப்பு வரவே இணைப்பை துண்டிக்காமல் பேசி உள்ளார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். செல்போனில் மின்கசிவு ஏற்பட்டதால் அவரை மின்சாரம் தாக்கியிருப்பது தெரியவந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: