முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்ற அலுவலகத்தை முத்துராமலிங்கம் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம், ஜூன்.16 - திருமங்கலம் சட்டமன்ற அலுவலகத்தை முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.,திறந்து வைத்ததோடு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். கடந்த கால தி.மு.க. ஆட்சியின் போது பாழடைந்து கிடந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முழுமையாக சீரமைக்கப்பட்டது. இதையடுத்து சட்டமன்ற அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று சிறப்புடன் நடைபெற்றது. தொகுதி மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட உள்ள சட்டமன்ற அலுவலகத்தை முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர் நன்றி தெரிவிப்பு சுற்றுப்பயணத்தின் போது 3சக்கர சைக்கிள் கேட்டு மனு கொடுத்த மாயாண்டிபட்டயை சேர்ந்த அம்சு மகன் சிவன்(30) என்பவருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 3சக்கர சைக்கிளையும் திருமங்கலம் அருமைநாயகம் ஊனமுற்றோர் மறுவாழ்வு மையத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

பின்னர் முத்துராமலிங்கம் நிருபர்களுக்கு பேட்டியளித்து கூறுகையில் திருமங்கலம் தொகுதி மக்களின் நலனுக்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் குறைகள் தொடர்பாக என்னை நேரடியாக சந்தித்து தெரிவிக்கலாம். மனுக்களாகவும் கொடுக்கலாம். பொதுமக்கள் குறைகள் அனைத்து மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். என்னிடம் முதியோர் உதவித்தொகை கேட்டு 6ஆயிரம் மனுக்கள் வந்துள்ளன. அவை அனைத்தும் முறைப்படி அரசு அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். எனவே திருமங்கலம், பேரையூர் தாலுகாக்களில் தகுதியுடைய நபர்கள் அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கனகராஜ், அ.தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் அய்யப்பன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம், மாவட்ட இலக்கியஅணி செயலாளர் திருப்பதி, தொகுதி செயாளர் ஆண்டிச்சாமி, நகரச்செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர் பாண்டியன், மகாலிங்கம், கள்ளிக்குடி பிரபு சங்கர், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், முன்னாள் நகரசபை தலைவர் நிரஞ்ஜன், மாவட்ட கவுன்சலர் அன்னலெட்சுமி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச்செயலாளர் தவமணி, ஒன்றிய அம்மா பேரவை அவைத்தலைவர் சாத்தங்குடி தமிழழகன் மற்றும் நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony