முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுத பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு - சீனா

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

அஸ்தானா, ஜூன் 16 - அணு ஆயுத பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று ஈரானும் சீனாவும் கருத்து தெரிவித்துள்ளன. உலகில் அணு ஆயுதங்களை சில நாடுகள் குவித்து  வருகின்றன. இந்த அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும் என்பதற்காக அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் ஒன்று ஏற்கனவே அமுலில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை சில நாடுகள் பின்பற்றி அணு ஆயுதங்களை குறைத்து வருகின்றன. என்றாலும் இதுவரை அணு ஆயுதம் தயாரிக்காத வேறு சில நாடுகள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான தொழில் நுட்பங்களை அபிவிருத்தி செய்து வருகின்றன. குறிப்பாக ஈரான் நாடு இதுபோன்ற அணு ஆயுத தொழில்நுட்பத்தை பின்பற்றி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. 

அணு ஆயுதத்தை ஈரான் தயாரித்து வருவதாக கூறி அந்நாட்டின் மீது பொருளாதார தடையை அமெரிக்கா ஐ.நா. துணையுடன் கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில் அணு ஆயுத பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று ஈரானும், சீனாவும் கூறியுள்ளன. கஜகஸ்தானில் நடைபெற உள்ள 10 வது ஷாங்கை ஒத்துழைப்பு கழக உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஈரான் அதிபர் மெஹ்மூத் அஹமதிநிஜாத் கஜகஸ்தான் சென்றுள்ளார். அப்போது அவர் சீன அதிபர் ஹு ஜின்டாவோவை அஸ்தானா நகரில் சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவுகள் குறித்தும் சர்வதேச பிரச்சனை குறித்தும் இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்த இரு தலைவர்களும் அணு ஆயுத பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவாத்தை நடத்துவது தான் சிறந்த வழி என்று கருத்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்