முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜுன் 16 - பத்திரிகையாளர் ஜே தே படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் துப்பு துலங்காததால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்ட்ர மாநிலத்தில் ஜே தே என்ற பத்திரிகையாளரை மர்ம நபர்கள் சிலர் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த படுகொலைக்கான குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்ட்ர முதல்வர் பிரிதிவிராஜ் சவுகானுக்கு பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். பத்திரிகையாளர் ஜே தே கொலையில் சில போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று ஊடக தகவல்கள் கூறுகின்றன. எனவே இந்த கொலை வழக்கை மாநில போலீசார் விசாரித்தால் அதில் நியாயம் கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்  அப்போது தான் இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும் என்று அந்த கடிதத்தில் நிதின் கட்காரி கூறியுள்ளார். பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டு 5 நாட்களுக்கு மேலாகியும் இந்த வழக்கில் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. எனவே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணை நடத்துவதே சிறந்ததாக இருக்கும் தான் கருதுவதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த கொலையில் உள்நாட்டு தாதாக்களுக்கோ அல்லது வெளிநாட்டு தாதாக்களுக்கோ தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுவதால் இந்த கோணத்திலும் மகாராஷ்ட்ரா அரசு விசாரணையை முடுக்கிவிட வேண்டும் என்றும் நிதின் கட்காரி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்