முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய எறிபந்து போட்டி: தமிழக பெண்கள் அணி சாம்பியன்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜூன், 16 - மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஜூனியர் தேசிய எறிபந்து சாம்பியன்ஷிப்பில் பெண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்கள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றது.

18வது சப் ஜூனியர் தேசிய எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டி மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள ஹோஷங்காபாதில் மர்மதா கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டிகளை அம்மாநில முதலமைச்சர் சர்தாஜ் சிங் துவக்கி வைத்தார். 

ஆண்கள் பிரிவில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. லீக் கம் நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள் பிரிவு  காலிறுதிப்போட்டியில்   தமிழக அணி 15-09, 15-11 என்ற புள்ளிகளில் மகாராஷ்டிராவையும், அரையிறுதியில் 15-13, 04-15, 16-14 என்ற புள்ளிகளில் மத்திய பிரதேசத்தையும் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டியில் தமிழக அணியும், டெல்லிஅணியும் மோதின. இதில் டெல்லி அணி 15-09, 15-11 என்ற புள்ளிகளில் நேர் செட்டில் தமிழகத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இதில் தமிழக அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

பெண்கள் பிரிவில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில் காலிறுதி போட்டியில் தமிழக அணி 15-02, 15-00 என்ற புள்ளிகளில் சட்டீஸ்கரை வென்றது. அரையிறுதி ஆட்டத்தில் தமிழக அணி 15-09, 15-07 என்ற புள்ளிகளில் டெல்லியை தோற்கடித்து இறுதிக்கு நுழைந்தது. இறுதிப்போட்டியில் மத்திய பிரதேசத்தை 15-02, 15-06 என்ற புள்ளிகளில் வென்ற தமிழக பெண்கள் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

இந்த போட்டியில் பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனையாக தமிழகத்தை சேர்ந்த எஸ்.சரவாணி நாக ஷெட்டி சிறப்பு பரிசு பெற்றார்.

சாம்பியன் பட்டம் வென்ற தமிழக பெண்கள் அணியினரையும், ரன்னர் அப் ஆக வந்த தமிழக ஆண்கள் அணியினரையும் தமிழ்நாடு மாநில எறிபந்து சங்க தலைவரும், வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யுமான சி.சைலேந்திரபாபு பாராட்டினார். இந்நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு மாநில எறிபந்து சங்க செயலாளர் பாலவினாயகம் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்