முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முனாப் படேல் சுழற் பந்தைவீசுகிறார் - ஆன்டி ராபர்ட்ஸ்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஆன்டிகுவா, ஜூன். 16 - இந்தியாவின் முன்னணி வீரரான முனாப் படேல் தற்போது சுழற் பந் தை வீசி வருகிறார் என்று மே.இ.தீவின் முன்னாள் வேகப் பந்து வீச் சாளரான ஆன்டி ராபர்ட்ஸ் கிண்டலாக தெரிவித்து இருக்கிறார். 

மேலும், இந்தியாவின் இளம் வேகப் பந்து வீச்சாளர்கள் முதலில் நம் பிக்கை அளிக்கின்றனர் என்றும், பின்பு வேகம் குறைந்து பந்தை சுழல விடுகின்றனர் என்றும், இது ஏன் என்று புரியவில்லை என்றும், இதற்கு நல்ல உதாரணம் முனாப் படேல் என்றும் அவர் கூறி இருக்கிறார். 

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்து வரும் ஒரு நாள் போட்டித் தொடரைக் காண வந்திருந்த ஆன்டி ராபர்ட்ஸ் ஆன்டிகுவாவில் நிருபர்களைச் சந்தித்த போது, அவர்களது கேள்விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கடந்த 2006 -ம் ஆண்டு முனாப் படேல் இங்கு வந்த போது, அவரது பந்து வீச்சில் வேகம் தென்பட்டது. ஆனால் தற்போது அவர் பந்தை சுழ ல விடுகிறார் என்றும் ராபர்ட்ஸ் கூறி இருக்கிறார். 

இந்திய அணி கடந்த 2006 -ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, இந்தியாவின் இளம் வேகப் பந்து வீச் சாளரான இர்பான் பதானுக்கு அவர் சில ஆலோசனைகளை அளித் தார். 

அப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரேக் சேப்பல் பணியாற்றினார். இடது கை பந்து வீச்சாளரா  ன பதானின் சில பிரச்சினைகளை தீர்க்குமாறு சேப்பல் கேட்டுக் கொண்டதன் பேரில் ராபர்ட்ஸ் அவருக்கு உதவினார். 

தவிர, சர்வதேச அளவில் வரும் இளம் வீரர்களுக்கு இது போன்ற உத வியை ஒரு முறை தான் செய்ய இயலும். பயிற்சியாளர்கள் இல்லாம லேயே இளம் வீரர்கள் இன்னும் சிறப்பாக பந்து வீச முடியும் என்றும் ஆன்டி தெரிவித்தார். 

இந்தப் பயிற்சியாளர்கள் பந்து வீச்சாளர்களை குறிதவறாமல் சரியாக பந்து வீச (லைன் அன்ட் லென்த்) பயிற்சியளிப்பார்கள். ஆனால் பந்து வீச்சாளர்களின் இயற்கைத் தன்மைக் கேற்றவாறு அவர்களுக்கு பயி ற்சி அளிக்க இயலாது. இதனால் இளம் வீரர்கள் தங்களது திறனை இழந்து விடுவார்கள் என்றும் ராபர்ட்ஸ் எச்சரித்தார். 

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் கிளைவ் லாயிட். அவரது கேப்டன்ஷிப்பில் மே.இ.தீவு அணி பல வெ ற்றிகளை பெற்று உலகின் நம்பர் - 1  அணியாக வலம் வந்தது. 

அப்போதைய அணியில் 4 வேகப் பந்து வீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தனர். அவர்கள உலக பேட்ஸ்மேன்களையே மிரட்டும் வகையில் அசுர வேகத்தில் பந்து வீசியது குறிப்பிடத்தக்கது. அந்த 4 பேரில் ஆன் டி ராபர்ட்ஸ் முதன்மை பந்து வீச்சாளராக இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்