ஸ்பெக்ட்ரம் ஊழல் - பெரம்பலூரில் அ.தி.மு.க மனித சங்கிலி

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      அரசியல்
Aiadmk

 

பெரம்பலூர்,பிப்.27 - பெரம்பலூரில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த பேரணிக்கு இலக்கிய அணி செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான வைகைசெல்வன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், 

கருணாநிதியின் குடும்ப ஆட்சி ஒழிந்து விடவே இப்பேரணி நடைபெறுகிறது. பேரணிக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் முன்னிலை வகித்தார். இதில் பாராளுமன்ற எம்.பி. கலிவரதன், வரவூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரகாசி, முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் வேப்பூர் கிருஷ்ணசாமி, இளைஞரணி மாவட்ட செயலாளர் சிவப்பிரகாசம், மாணவரணி செயலாளர் இளம்பை தமிழ்செல்வன், தொகுதி செயலாளர் அரியலூர் கணேசன், மாவட்ட இணை செயலாளர் ராணி, மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, முன்னாள் பேரூராட்சி தலைவர் அரும்பாவூர் கமலம் ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வேணுகோபால், இடது கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்லதுரை, ம.தி.மு.க. நகர செயலாளர் சின்னராஜேந்திரன், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மீராமுகைதீன், காதிர்பாட்சா மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: