முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-மே.இ.தீவு அணிகள் இன்று மோதல்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கிங்ஸ்டன், ஜூன். 16 - இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 5 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவில் இன்று நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஆயத்தமாக உள்ளனர். 

இந்தப் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட 13 பேர் கொண்ட மே.இ.தீவு அணியில் துவக்க வீரர் பரத் இடம் பெற்று இருக்கிறார். அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் இதிலும் இடம் பெறவில்லை. 

கேப்டன் சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய அணி மேற்கு இந் தியத் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் டேரன் சம்மி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

மே.இ.தீவு மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே 4 போட்டிகள் முடிவடைந்து விட்டன. 

முன்னதாக நடைபெற்ற முதல் மூன்று போட்டியில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. பின்பு ஆன்டி குவாவில் நடைபெற்ற 4 -வது போட்டியில் மே.இ.தீவு அணி ஆறுதல் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையே யான 5 -வது மற்றும் கடைசி போட்டி ஜமைக்கா தீவில் உள்ள கிங்ஸ்டன் நகரில் இன்று நடக்க இருக்கிறது. 

இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதல் போட்டி முத லே அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் நிராகரிக்கப்பட்டார். அவர் சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக ஆடி ரன்னைக் குவித்தது நினைவு கூறத்தக்கது. 

துவக்க வீரர் அட்ரியன் பரத் காயம் காரணமாக நான்கு போட்டிகளில் பங்கு கொள்ளவில்லை. எட்வர்ட்சுக்கு பதிலாக அவர் அணியில் இட ம் பெற்று இருக்கிறார். அதே போல டன்சா ஹியாட்டுக்குப் பதிலாக ரவி ராம்பால் இடம் பெற்று இருக்கிறார். 

21 வயதான பரத் அக்குள் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இதற்கா க அவர் சிகிட்சை எடுத்து வந்தார். இதனால் 2011 -ம் ஆண்டு உலகக் கோப்பை முதல் அவர் போட்டி எதிலும் பங்கேற்கவில்லை. 

டன்சா ஹியாட் மற்றும் கிர்க் எட்வர்ட்ஸ் ஆகியோருக்குப் பதிலாக அட்ரியன் பரத் மற்றும் ரவி ராம்பால் இருவரும் அணியில் சேர்க்கப்ப ட்டு உள்ளனர் என்று மே.இ.தீவு கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள அறி க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்