முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த தின விழா

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம், ஜூன்.17 - திருமங்கலம் தியாகி விஸ்வநாத தாஸ் 125 பிறந்த தினத்தை முன்னிடட்டு அவரது சிலைக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட காலத்தின் போது ஆங்கிலேயர்களை எதிர்த்து நாடகம் நடத்தி மக்களிடையே சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவர் தியாகி விஸ்வநாத தாஸ் ஆவார். சுதந்திரத்திற்காக வீரமுடன் போராடியதால் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இத்தகைய தியாகி விஸ்வநாததாசின் 125 வது பிறந்த தினவிழா திருமங்கலத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ கலந்து கொண்டு வீரத்தியாகி விஸ்வநாததாசின் திருவுருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மதுரை கலெக்டர் சகாயம், திருமங்கலம் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் ராஜூவை சந்தித்த விஸ்வநாததாசின் வாரிசுகள் தாங்கள் வறுமையால் வாடுவதாகவும் தங்களுக்கு ஏதாவது அரசு வேலை தரும்படியும் கேட்டுக்கொண்டனர். இதை கனிவுடன் அமைச்சர் இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த விழாவில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட வக்கீல்கள் பிரிவு சங்க செயலாளர் தமிழ்ச்செல்வம், தொகுதிச்செயலாளர் ஆண்டிச்சாமி, நகரச்செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன் மகாலிங்கம், ராமசாமி, மாவட்ட கவுன்சிலர் அன்னலெட்சுமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் நிரஞ்சன், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், கள்ளிக்குடி ஒன்றிய துணைச் செயலாளர் பிரபு சங்கர், ஒன்றிய அம்மா பேரவை அவைத்தலைவர் சாத்தங்குடி தமிழழகன் திருமங்கலம் நகராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், திருமங்கலம் பகுதி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

புட்நோட்:

திருமங்கலம் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் 126 பிறந்த தின விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மதுரை கலெக்டர் சகாயம், எம்.எல்.ஏ.க்கள முத்துராமலிங்கம், கருப்பையா ஆகியோர் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago