முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முறைகேடுகளில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.17 -​ முறைகேடுகளில் ஈடுபடும் எண்ணெய் மொத்த வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார். பொது வினியோக திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உணவு துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது.   கூட்டத்தில் கூட்டுறவு, உணவுத்துறை செயலாளர் யதிந்திரநாத் ஸ்வைன், உணவுத்துறை ஆணையர் பாலச்சந்திரன், குடிமை பொருள் வழங்கல் துறை கூடுதல் டி.ஜி.பி.ராதா கிருஷ்ணன், அதிகாரிகள் வீரசண்முகமணி, மகேஸ்வரி உள்பட மாநில அளவிலான உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

முதல்​அமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி பொது விநியோக திட்ட செயலாக்கப்பணி குறித்து இங்கு விவாதிக்கப்படுகிறது. அரசு அதிகாரிகள் மிக சிறப்பாக செயல்பட்டு முதல்​அமைச்சரின் எதிர் பார்ப்புக்கு ஏற்ப குறைகள் ஏற்படா வண்ணம் நேர்மையாக கடமையாற்ற வேண்டும். உணவு பொருள் கடத்தல், பதுக்கல் கண்டு பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் குடிமை பொருள் குற்றபுலனாய்வு துறை அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து கண் காணிக்க வேண்டும். 

அவ்வப்போது வாகன சோதனை, குடோன்களில் சோதனை நடத்த வேண்டும். ரேஷன் அரிசி, மண்எண்ணை, ஆகியவைகளை பதுக்கும் கடத்தல் காரர்கள், கள்ளச் சந்தையில் விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுகக்க வேண்டும். இலவச அரிசியை வாங்கி சில கடைக்காரர்கள் விற்பதாகவும், தகவல் வருகிறது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் மண்எண்ணை மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகள் ஆகியோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் நியாயவிலை கடை பொறுப்பாளர்கள், குடோன் பொறுப்பாளர்கள் ஆகியோர் மீதும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாவட்டத்தில் உள்ள பெரிய அரிசி, மாவு அரைக்கும் ஆலைகளில் ரேஷன் அரிசி பதுக்கப்படுகிறதா? என்பதையும் கண்டறிய வேண்டும். புதிய ரேஷன் அட்டை கேட்கும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை உரிய முறையில் விசாரணை செய்து குடும்ப அட்டைகள் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போலி குடும்ப அட்டைகளை nullநீக்கும் போது உண்மையான குடும்ப அட்டை தாரர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார். 

முன்னதாக எழிலகத்தில் உள்ள உணவுப் பெருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகங்களை துறைவாரியாக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony