முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் ரங்கசாமிக்கு சி.பி.எம். வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூன்.17 - புதுவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரதேச குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் நிலவழகன் தலைமை தாங்கினார். தமிழ்மாநில குழு உறுப்பினரும், புதுச்சேரி பொறுப்பாளருமான குணசேகரன் முன்னிலை வகித்தார். இதில் கீழ்கண்ட முடிவுகள் எடக்கப்பட்டது. 

புதுவை சட்டசபை தேர்தலில் மக்கள் விரோத கொள்கை, தவறான ஆட்சி நடைமுறையை கடைப்பிடித்த காங்கிரஸ் கட்சியை அதிகாரத்திலல் இருந்து அகற்றி மாற்றத்தை விரும்பிய மாநில மக்கள் அ.தி.மு.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். மாநில மக்களின் உணர்வுகள், எதிர்பார்புகளை நிறைவேற்ற முறையான ஆட்சி அமைத்திடவும், நிறைந்துள்ள மக்கள் பிரச்சனை, காங்கிரஸ் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் போன்றவற்றை செயல்படுத்த சட்டமன்றத்தை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று இக்குழு வற்புறுத்துகிறது.

கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் புதுவையின் மாநில வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநில வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிந்து 4 மாநிலங்களில் முழுமையான அமைச்சரவை அமைத்து முழு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

ஆனால் தேர்தல் நடந்து 33 நாட்கள் ஆகியும் புதுவை மாநிலத்தில் முழுமையான அமைச்சரவை அமைக்காமலும், அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யாமலும், சபாநாயகர் தேர்தல் நடத்தாமல் காலம் கடத்தி வருவது, ஆட்சி அமைக்க நேரம் காலம் பார்த்து தாமதப்படுத்தி வருவது நியாயமற்றது. மக்கள் வாக்கு அளிக்கும் போது நேரம் காலம் பார்க்கவில்லை. தேர்தல் முடிவுகளை அறிவிக்கவும் நேரம் காலம் பார்க்கவில்லை. 

ஆனால் தனி நபர் நம்பிக்கையை மக்கள் மீது திணிப்பது நியாயமற்றது. பல்வேறு தரப்பு மக்கள் விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சனைக்கு ஆட்பட்டு கஷ்டப்படும்போது நேரம் காலம் பார்ப்பது காலத்திற்கு ஒத்துவராது. மேலும் அதனாலும் எந்த பிரச்சனையும் முடிவுக்கு வராது. எனவே அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்து, சபாநாயகர் தேர்தல் நடத்தி, திட்டங்களை செயல்படுத்தி, இந்த குழப்பான சூழ்நிலை விலகி நிரந்தர தீர்வு காண வழி செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுதப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony