முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் தொடரில் சாதித்து காட்டுவேன்: அபிமன்யு

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 17 - மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசி சாதித்துக் காட்டுவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இளம் இந்திய வீரர் அபிமன்யு மிதுன். இது பற்றிய விபரம் வருமாறு -  இந்தியாவின் மூத்த பந்து வீச்சாளர்களான ஜாஹிர்கான் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் காயம் காரணமாக மேற்கு இந்தியத் தீவுகளுக்கு செல் லும் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். 

மேற்படி வீரர்களுக்குப் பதிலாக பிரவீன் குமார், அபிமன்யு மிதுன் உள்ளிட்ட இளம் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்ப ட்டது. தற்போது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் முடியும் தருவாயில் உள்ளது. 

இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடை பெற உள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள அபிமன் யு மிதுன் இந்தத் தொடர் குறித்து கூறியதாவது - 

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் எனக்கு வழங்க ப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன். கடந்த ஆண்டு இலங் கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானேன். 

அத்தொடரில் பெரியளவில் நான் சாதிக்கவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்கா தொடரில் நான் தேர்வு செய்யப்படவில்லை. இது எனக் கு ஏமாற்றத்தை அளித்தது. எனவே இந்திய அணியில் மற்றொரு வாய்ப்பிற்காக காத்திருந்தேன். 

இப்போது மீண்டும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை சிறப்பாக பயன்படுத்தி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதித்து காட்டுவேன். 

அன்று நான் பட்ட வேதனையால் சோர்வடைந்து இருந்தேன். இப் போது மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்காக ஆட வாய்ப்பு கிடைத்து ள்ளது. நான் சோர்வாக இருந்த காலத்தில் என்னை ஊக்குவித்த உறவி னர்கள், நண்பர்கள் மற்றும் சக வீரர்கள் எனக்களித்த உற்சாகத்திற்கு தக்க பதிலாக இத்தொடரில் சிறப்பாக ஆடிக் காட்டுவேன். 

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால், கிடைத்த இந்த வாய்ப் பை முழு வீச்சில் பயன்படுத்தி பலன் பெறுவேன். தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெறும் அளவுக்கு சிறப்பாக ஆடுவேன். இவ்வாறு மிதுன் கூறினார். 

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போ  ட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3 - 1 என்ற கணக் கில் தொடரை வென்றுள்ளது. முன்னதாக நடந்த ஒரே ஒரு டி - 20 போட்டியிலும் வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்