முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி ஒரு நாள் போட்டியில் மே.இ.தீவு வெற்றி

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஜமைக்கா, ஜூன். 18 - இந்திய அணிக்கு எதிராக ஜமைக்காவில் நடைபெற்ற 5 - வது ஒரு நா ள் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை வென்ற இந்திய அணிக்ககு கோப்பை வழங்கப்பட்டது.  

இந்தப் போட்டியில் மே.இ.தீவு அணி தரப்பில், டிவைன் பிராவோ மற்றும் சர்வான் இருவரும் இணைந்து பேட்டிங் செய்து அணிக்கு வெ ற்றி தேடித் தந்தனர். சாமுவேல்ஸ் மற்றும் பொல்லார்டு ஆகியோர் அவர்களுக்கு பக்கபலமாக ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, ரஸ்செல் நன்கு பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரோச், பொல்லார்டு மற்றும் மார் டின் ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர். 

இந்திய அணி தரப்பில், கோக்லி, ரோகித் சர்மா மற்றும் யூசுப் பதான் ஆகிய மூவர் மட்டும் தாக்குப் பிடித்து பேட்டிங் செய்தனர். மற்ற இள ம் வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். 

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 -வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஜமைக்கா தீவில் கிங்ஸ்ட ன் நகரில் உள்ள சபீனா பார்க்கில் நடைபெற்றது. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற மே.இ.தீவுகள் அணி பீல்டிங் கை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில், எஸ்.தவான் மற்றும் பா ர்த்திவ் படேல் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் களம் இறங்கிய இந்திய அணி 47.3 ஓவரில் அனைத்து விக்கெ ட்டையும் இழந்து 251 ரன்னை எடுத்தது. இந்திய அணி சார்பில் இரண்டு வீரர்கள் அரை சதமும், ஒரு வீரர் கால் சதமும் அடித்தனர். 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விராட் கோக்லி 6 ரன் வித்தியாசத்தில் சதவாய்ப்பை நழுவ விட்டது ரசிகர்களுக்கு ஏமா ற்றத்தை அளித்தது. அவர் 104 பந்தில் 94 ரன்னை எடுத்து இறுதியில் ரன் அவுட்டானார். இதில் 10 பவுண்டரி அடக்கம். அவரது அதிரடி ஆட்டமும் வீணானது. 

அடுத்தபடியாக, ரோகித் சர்மா 72 பந்தில் 57 ரன்னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, யூசுப் பதான் 29 பந்தில் 30 ரன்னை எடுத்தார். எம்.கே. திவாரி 22 பந்தில் 22 ரன்னை எடுத்தார். கேப்டன் ரெய்னா பூஜ்யத்திலும், படேல் 6 ரன்னிலும், எஸ். தவான் 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 

மே.இ.தீவு அணி தரப்பில் ரஸ்செல் 35 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். பொல்லார்டு 39 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ரோச் 52 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, மார்டின் 1 விக்கெட் எடுத்தார். 

மே.இ.தீவு அணி 252 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இல க்கை இந்திய அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 48.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 255 ரன்னை எடுத்தது. 

இதனால் மே.இ.தீவு அணி இந்த 5 -வது மற்றும் கடைசி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டி கள் கொண்ட இந்தத் தொடர் 3 - 2 என்ற கணக்கில் முடிவடைந்துள்ளது. 

மே.இ.தீவு அணி சார்பில், டிவைன் பிராவோ அதிகபட்சமாக 99 பந்தி ல் 86 ரன்னை எடுத்தார். சர்வான் 94 பந்தில் 75 ரன்னை எடுத்தார். தவி ர, சாமுவேல்ஸ் 28 ரன்னையும், பொல்லார்டு 24 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி தரப்பில், அமித் மிஸ்ரா 46 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். வினய் குமார் 46 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத் தார். இஷாந்த் சர்மா, அஸ்வின் மற்றும் ரெய்னா ஆகியோருக்கு விக் கெட் கிடைக்கவில்லை. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ரஸ்செல் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக ரோகித் சர்மா தேர் வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்