முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல்கொய்தா புதிய தலைவர் ஜவாஹிரி

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

கெய்ரோ,ஜூன்.18 - அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் புதிய தலைவராக ஷேக் அய்மனஅ ஆல் ஜவாஹிரி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அல்கொய்தா தலைவரான ஒசாமா கடந்த மாதம் பாகிஸ்தான் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதை அடுத்து புதிய தலைவராக எகிப்து நாட்டை சேர்ந்த ஷேக் அய்மன் அல் ஜவாஹிரி அறிவிக்கப்பட்டுள்ளார். 

டாக்டராக இருந்த ஜவாஹிரி புனித போரில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். 59 வயதான இவர் பின்லேடனின் வலதுகரமாக இருந்தவர். அல்கொய்தாவின் பல்வேறு பிரிவுகளுக்கும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அல்கொய்தாவின் நடவடிக்கைகளை ஜவாஹிரி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் இருந்து செயல்படுத்துவார் என தெரிகிறது. பல்வேறு பயங்கரவாத செயல்களில் முக்கிய பங்காற்றிய அவரது தலைக்கு சுமார் ரூ. 18 கோடி விலை குறிக்கப்பட்டுள்ளது. பின்லேடன் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய போது புனித போர் தொடங்கும் என ஜவாஹிரி கூறியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்