முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் அக்தர் பங்கேற்க்கவில்லை

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லாகூர், ஜூன். 18 - இலங்கையில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் பங்கேற்கமாட்டார் என்று தகவல்கெள் தெரிவிக்கின்றன. இது பற்றிய விபரம் வருமாறு - 

வரும் ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை நடைபெற உள்ளது இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர். ஐ.பி.எல். போன்ற இந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் சோயி ப் அக்தர் கலந்து கொள்ள மாட்டார். 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ளார் முன் னணி வீரரான சோயிப் அக்தர். அவர்  தனது வயதான பெற்றோருடன் மீதி காலத்தை செலவழிக்க விரும்புவதாக கூறினார். 

அதனால் மேற்கொண்டு கிரிக்கெட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமில்லை. அதனால் தான் கிரிக்கெட் தொடர்பான எந்த பணிகளையும் நான் ஏற்கவில்லை. 

இலங்கை பிரீமியர் லீக்கில் பங்கேற்க அழைப்பு வந்துள்ள நிலையில் நான் பங்கேற்க முடியாத நிலை குறித்து விளக்கமளித்துள்ளேன் என்கிறார் ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் அக்தர். 

என்னுடைய 18 - வது வயது முதல் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி களைத்து விட்டேன். என் உதவி தேவைப்படும் இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்க தயாராக உள்ளேன். 

அத்துடன் என் வாழ்நாளின் மீதி காலத்தை நற்பணிகளில் ஈடுபட ஆர் வம் கொண்டுள்ளேன் என்று அக்தர் மேலும் கூறினார். 

தற்போது அக்தர், அப்ரிடி, கெய்ல், கிப்ஸ் , வெட்டோரி, மற்றும் கெ வின் ஓ பிரைன் உள்ளிட்ட பன்னாட்டு கிரிக்கெட் வீரர்கள் இலங்கை பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க தயாராக இல்லை. 

இலங்கை பிரீமியர் லீக் போட்டிகள் ஜூன் மாதம் 19 -ம் தேதி தொட ங்கி ஆகஸ்டு மாதம் 21 -ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்திய வீரர்கள் பங்கேற்பு குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago