மேற்கு வங்கத்திற்கான தேர்தல் அறிக்கையே ரயில் பட்ஜெட் - பா.ஜ.க.

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      அரசியல்
bjp-flag1 0

 

புது டெல்லி,பிப்.27 - மம்தாவின் ரயில் பட்ஜெட் மேற்கு வங்கத்திற்கான தேர்தல் அறிக்கையாகவே உள்ளது என்று பா.ஜ.க. கூறியுள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்கத்துக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட் மேற்கு வங்கத்துக்கான தேர்தல் அறிக்கை போல் உள்ளது. மேற்கு வங்கத்தை மையப்படுத்தியே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பிற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ரயில்வே பட்ஜெட் அறிவியல் பூர்வமாக தயாரிக்கப்பட வேண்டும். வளர்ச்சியிலும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் மாநிலங்களுக்கு சம முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் இருக்க வேண்டும் என்று பா.ஜ.க. பொதுச் செயலாளர் அனந்த் குமார் கூறியுள்ளார்.  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா கூறுகையில், 

மக்களை கவரும் சில அறிவிப்புகள் இருந்தாலும் சிறப்பாக சொல்லக் கூடிய வகையில் இந்த பட்ஜெட் இல்லை. இந்த பட்ஜெட்டால் யாரும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். தற்போது நடந்து வரும் பணிகள் தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறுகையில், 

ரயில்வே பட்ஜெட் புள்ளி விவரங்களின் மோசடி என்றார். ரயில்வேயின் நிதி நிலைமை மிக மோசமடைந்திருப்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். நாடு 8 முதல் 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கும் நிலையில் ரயில்வே 12 சதவீதம் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலைப்படி பார்த்தால் 3 சதவீதம்தான் வளர்ச்சியடைந்திருக்கிறது என்றார் அவர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: