முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் டெஸ்ட்: மே.இ.தீவு அணியில் எட்வர்ட்சுக்கு இடம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கிங்ஸ்டன், ஜூன். 19 - இந்தியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்காக 13 பேர் கொண்ட மே.இ.தீவு அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் வேகப் பந்து வீச்சாளர் எட்வர்ட்ஸ் இடம் பெற்றார். அதிரடி துவக்க வீரரான கிறிஸ் கெய்ல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். கேப்டன் சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய அணி மேற்கு இந் தியத் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் டேரன் சம்மி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

மே.இ.தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஒரே ஒரு டி - 20 போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ் ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. 

இதில் டி - 20 போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டி ஆகியவை முடிவ டைந்து விட்டன. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தி ய அணி 3 - 2 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையைக் கை ப்பற்றியது. 

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்கா தீவில் கிங்ஸ்டன் நகரில் உள்ள சபீனா பார் க்கில் வரும் திங்கட்கிழமை துவங்க இருக்கிறது. 

இந்திய அணியின் மூத்த வீரர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் முன் னதாக நடந்த டி - 20 மற்றும் ஒரு நாள் தொடரில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் இளம் வீரர்களுக்கு இதில் வாய்ப்பு அளிக் கப்பட்டது. 

தற்போது டெஸ்ட் தொடரில் கேப்டன் தோனி, ஹர்பஜன் சிங், ராகு ல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மண் ஆகியோர் ஆட தயாராகி வருகின்றனர். ஜாஹிர்கான் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் காயமடைந்து இருப்பதால் டெஸ்டில் ஆடவில்லை. 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்காக 13 பேர் கொண்ட மே.இ.தீவு அணியை நேற்று கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதி ல் வேகப் பந்து வீச்சாளர் பிடெல் எட்வர்ட்சுக்கு இடம் கொடுக்கப்பட்டது. கிறிஸ் கெய்ல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். 

தற்போது மே.இ.தீவு அணியில் கீமர் ரோச், ரவி ராம்பால் மற்றும் எட்வர்ட்ஸ் ஆகிய 3 வேகப் பந்து வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். முதல் டெஸ்ட் நடக்க இருக்கும் சபீனா பார்க் மைதான ஆடுகளம் வே கப் பந்து வீச்சிற்கு ஏற்றவாறு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எட்வர்ட்ஸ் மே.இ.தீவு அணி சார்பில் இதுவரை 43 டெஸ்ட் போட்டிக ளில் பங்கு கொண்டு இருக்கிறார். இதில் 122 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருப்பது நினைவு கூறத்தக்கது. 

இங்கிலாந்தில் கடந்த 2009 -ம் ஆண்டு நடைபெற்ற டி - 20 உலகக் கோ ப்பை போட்டியின் போது எட்வர்ட்ஸ் காயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2 ஆண்டு காலமாக சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. 

காயம் குணமடைந்த பிறகு, எட்வர்ட்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியி ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். இதில் மீண்டும் அவர் காயம் அடைந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்