முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாரடைப்பால் ஆண்டுக்கு 1.25 கோடி பேர் மரணம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன். - மாரடைப்பால் ஆண்டுக்கு 1.25 கோடிபேர் இறக்கிறார்கள் என்று மீனாட்சிமிஷன் மருத்துவ கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் மதுரை மடீட்சியாவில் மருத்து கருத்தரங்கு நடந்தது. இதில் மீனாட்சி மிஷன்மருத்துவ மனையின் பல்வேறு துறைகளின் மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். உடல்நல பரிசோதனை நிபுணர் டாக்டர் எம்.பழனிச்சாமி பேசும் போது, 40 வயது முதல் 60 வயது வரை பல்வேறு நோய்கள் வருகின்றன. இன்றைய இளைஞர்கள் பல்வேறு பிரச்சினைகள்,வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். வருடம் ஒரு முறை முழு உடல்பரிசோதனை மேற்கொண்டால் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம் என்றார். சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் எஸ்.ரவிக்குமார் பேசும் போது, சர்க்கரை நோயின் தலைநகரமாக இந்தியா திகழ்கிறது. 50 சதவீத சர்க்கரை நோய்களுக்கு அறிகுறிகளே இருப்பதில்லை. மன அழுத்தம்,உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் சர்க்கரை நோய் தாக்குகிறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க ஒரே வழி நடைபயிற்சிதான் என்றார்.

   இதய நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் சம்பத்குமார் பேசும்போது, உலகம் முழுவதும் சுமார் 1.25 கோடி பேர் இறக்கிறார்கள். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா,ஜப்பான் போன்ற நாடுகளில் இதய நோய் தாக்கம் குறைவாக உள்ளது. ஆனால் வளரும் நாடுகளான இந்தியா,சீனா போன்ற நாடுகளில் இதய நோய் அதிகமாக உள்ளது. இதய நோய்க்கு முக்கய காரணம் புகை பிடிப்பதுதான். ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் ரசாயன பொருட்கள் உள்ளது. அதில் 200 இதயத்திற்கு மிகவும் தீமை விளைவிக்க கூடியது. தினமும் 40 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் இதய நோயை தடுக்கலாம் என்றார். சிறுநீரகவியல் மருத்துவ நிபுணர் டாக்டர் சம்பத்குமார் பேசும்போது, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்து கொண்டால் சிறுநீரக பாதிப்பினை கண்டறியலாம். 90 சதவீத பாதிப்புக்கு பின்தான் சிறுநீரக கோளாறு தெரியவரும். சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம், சிறு நீரக கற்கள் போன்றவைகளால் இந்த நோய் வரும். சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகும் கிளாத்தோ பரோட்டீன் என்ற ஹார்மோன் மனத ஆயுளை நீடிக்கச்செய்கிறது என்றார்.

  மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.செல்வமுத்துக்குமரன் பேசும் போது, உடலில் மிக நுண்ணிய உறுப்பு மூளையாகும். இந்தியாவில் வருடத்திற்கு 1 லட்சம் பேர் சாலை விபத்தினால் இறக்கிறார்கள். விபத்தில் இறப்பவர்கள் அதிகம் தலைகாயத்தால் தான் இறக்கிறார்கள்.ஹெல்மட்,சீட் பெல்ட், சாலைவிதிகளை மதித்தால் மூளையை பாதுகாக்கலாம் என்றார். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் மடீட்சியா கிளப் செயலாளர் ஜி.கந்தசாமி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்