முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீபத்மநாபா சுவாமி கோயில் ரகசிய அறைகளை திறக்க முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,ஜூன்.19 - கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருக்கும் ஸ்ரீபத்மநாபாசுவாமி கோயிலில் ரகசியமாக இருக்கும் பாதாள அறைகள் இந்தமாத இறுதியில் திறக்கப்பட உள்ளன. அந்த அறைகளில் ஏராளமான தங்க நகைகளும்,வைர நகைகளும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். 

திருவனந்தபுரம் மையப்பகுதியில் ஸ்ரீபத்மநாபாசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் 6-க்கும் மேற்பட்ட பாதாள அறைகள் உள்ளன. இந்த அறைகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டு இருகிறது. மன்னர் குடும்பத்திற்கு சொந்தமான விலைமதிப்புமிக்க தங்கம் மற்றும் வைர நகைகள், கீர்த்தி வாய்ந்த பழம்பெரும் பொருட்கள் இருக்கலாம் என்றும் அதை திறக்க உத்தரவிட வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டதாக தெரிகிறது. இதன்பேரில் அந்த அறைகளை திறக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பார்வையாளர்களாக கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் 2 பேர்களை சுப்ரீம்கோர்ட்டு நியமித்துல்ளது. இவர்கள் மேற்பார்வையில்தான் அறைகள் திறக்கப்படும் என்று கோயில் நிர்வாக அதிகாரி ஹரிகுமார் நேற்று திருவனந்தபுரத்தில் கூறியுள்ளார். சாயிபாபா அறையை திறந்து பார்த்தபோது அதில் ரொக்கம் ரூ.10 கோடியும் 58 கிலோ தங்கமும் இருந்தது. இதேமாதிரி ஸ்ரீபத்மநாபா கோயிலில் உள்ள பாதாள அறையிலும் மன்னர் பரம்பரையினர் விலைமதிப்புமிக்க பொருட்களை வைத்திருக்கலாம் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உள்ளது. நம்பிக்கை என்றுமே வீண் போனதில்லை. அந்தக்காலத்தில் கோயில்களுக்கு மன்னர்கள் நிலம் மட்டும்மல்லாது விலைமதிப்பு மிக்க பொருட்களையும் காணிக்கையாக வழங்கியிருக்கிறார்கள். அந்த பொருட்கள் பெரும்பாலான கோயில்களில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருப்பதி வெங்கடாலசபதி கோயில் நகை மதிப்பு மட்டும் ரூ.2 லட்சம் கோடி என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நகைகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதேமாதி இதர முக்கிய கோயில்களிலும் ஏராளமான சாமி நகைகள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்