முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரேபியாவில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.27 - சவுதி அரோபியாவில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா முன்னிட்டு  முப்பெரும் விழா பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் என்.நயினார் நாகேந்திரனையும், கடையநல்லூர் முன்னாள் வேட்பாளர் ஜெயலலிதா பேரவை தகவல் தொடர்பாலர் கமாலுத்தீனையும் அனுப்பிவைத்து கூட்டத்தை சிறப்பிக்க அனுமதி அளித்த ஜெயலலிதாவுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது. முப்பெரும் விழாவுக்கு வருகை தந்த கமானுத்தின் கூட்டத்தை சிறப்பித்துவிட்டு ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என்று  புனித மக்கா சென்று ஜெயலலிதாவுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்த கமாலுத்தீனுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.

ஜெயலலிதாவுக்கு தென் சென்னை விருகம்பக்கம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுதாக்கல் செய்த சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரனுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.

நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவையின் தகவல் ஆணையாளர் கமாலுத்தீனுக்கு சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி, ஜெயலலிதாவின் தலைமையில் எம்.ஜி.ஆரின் நல்லாட்சி அமைந்திட ஜெயலலிதாவுக்கும் ஜெயலலிதா நியமித்த கழக வேட்பாளர்களுக்கும், தோழமை கட்சி வேட்பாளர்களுக்கும் அயராது பாடுபட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. சவுதி அரேபியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைவருக்கும் தொலைபேசி மற்றும் கைபேசி மூலமாகவும் தேர்தல் பிரச்சாரம் செய்யுமாறு இக்கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு ஜெயலலிதா ஆட்சிமலர சவுதியிலுள்ள அனைத்து தமிழர்களையும் சந்தித்து மைனாரிட்டி தி.மு.க அரசை வீழ்த்தவும் தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கினை மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சவுதி அரேபியா ஜெயலலிதாவை அகில உலக ஜெயலலிதா பேரவையாக ஆக்குவதற்கு ஜெயெலலிதாவிடம் இக்கூட்டம் வாயிலாக ஜெயலலிதா ஆணையை பெறுவதற்காக காத்திருக்கிறோம் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாம் அனைவரும் தாயகம் சென்று, கட்சிப்பணியாற்றி கட்சிக்கு வலிமை சேர்க்கவும், ஜெயலலிதாவை தமிழக முதல்வராக ஆக்கவும் கடுமையாக உழைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

முன்னாள் அமைச்சர் என்.நயினார் நாகேந்திரனையும், கடையநல்லூர் 2006 சட்டமன்ற வேட்பாளர் கழக தகவல் தொடர்பாளர் கமாலுத்தீனையும், டாக்டர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்து இந்த கூட்டத்தை சீரும் சிறப்புமாக நடத்திய சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவைக்கு பெருமை தேடித்தந்த சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.எம்.மைதீனுக்கும், பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கிறது.

சவுதி அரேபியா முப்பெரும் விழாவுக்கு வருகை தந்து கூட்டத்தை சிறப்பித்த அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கும், கழக தகவல் தொடர்பாளர் கடையநல்லூர் கமாலுத்தீனுக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்